Sunday, February 8, 2015

GDS ஊழியர்களுக்கு உதவுங்கள்.

GDS ஊழியர்களுக்கு உதவுங்கள்.

நாம் எவ்வளவோ முயன்றும் போஸ்ட்மேன் பணி காலியிடங்கள் வெளியாருக்கு சென்று விட்டபடியால், 2013 ம் ஆண்டு GDS TO POSTMAN எக்ஸாம் எழுதி, அதில் வெற்றி பெற்று, பிறகு மதிப்பெண் மாற்றப்பட்டு, பின் அந்தரத்தில் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள  நமது போஸ்ட்மேன்  ஊழியர்களுக்கு நல்லதொரு தீர்வினை உடனடியாக  பெற்று தாருங்கள். ஏற்கனவே சர்ப்ளஸ் வேகண்டில் அடுத்த மார்க் எடுத்த தோழர்கள்  போஸ்ட்மேனாக உள்ளார்கள். இதையெல்லாம் எடுத்துக்கூறி அவர்கள் துயர் துடைக்க உதவுங்கள்.

இலாகாவின் P.A  காலி பணியிடங்களில் தற்காலிகமாக பணி புரிய, விருப்பமுள்ள POSTMAN, அவர்கள் கிடைக்காத பட்சத்தில் விருப்பமுள்ள MTS  ஊழியர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் படி செய்யுங்கள்

GDS ஊழியர்கள் பலர், குறிப்பாக சீனியர் தோழர்கள், தங்களது கணவர் / மனைவி, மக்கள் நோய்வாய்ப்பட்டு,அதற்கான ஆபரேசன் உள்ளிட்ட மருத்துவ செலவுகளுக்கு பணமின்றி தவிக்கின்றனர். பகுதி நேர  ஊழியர்கள் என்பதற்காக  ஆஸ்பத்திரிகள் பாதி பணம் கேட்பதில்லை. தயவு செய்து,மனிதாபிமான கண்ணோட்டத்தோடு 2 or 3 லட்ச ரூபாய்க்கு மருத்துவ உதவி தொகையினை உயர்த்தி வழங்கும் படி செய்யுங்கள். அல்லது தனியார் மருத்துவ காப்பீடாவது செய்து கொடுங்கள். அதற்கான தொகையினை சம்பளத்தில் பிடிக்கும் படி செய்யுங்கள். மனிதநேய உள்ளம் படைத்த p3 மாநில செயலாளர் தோழர், JR அவர்கள், தோழர், ஸ்ரீ வெங்கடேஷ் அவர்கள், தோழர், வீரமணி அவர்கள், GDS மாநில செயலாளர் தோழர்,தனராஜ் அவர்கள் நிச்சயம் இதில் உதவும்படி கேட்டுகொள்கிறேன்.

  மேலும் ,GDS ஊழியர்களின் குழந்தைகள் மேற்கல்வி படிக்கவும், வீடு கட்டவும், வீடுகளில் கல்யாணம் போன்ற சுபகாரியங்களுக்காகவும் ஒவ்வொரு GDS ஊழியர்களுக்கும் ஏதாவது ஒரு வங்கி அல்லது சொசைட்டியில் பர்சனல் லோன்  2 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வழி செய்யுங்கள். அதையும் சம்பளத்தில் பிடிக்கும் படி செய்யுங்கள். அனைத்து GDS ஊழியர்களும் ரூபாய் 2 லட்சம் வரை PLI பாலிஸி எடுத்துள்ளோம். எனவே இலாகா பயப்படவேண்டாம்.

,MTS, POSTMAN, P.A தேர்வுகளில் வயது வித்தியாசமின்றியும்,சீனியாரிட்டி அடிப்படை முறையிலும் அனைத்து GDS ஊழியர்களும்  கலந்துகொள்ளும்படி செய்தல்,   குறைந்தபட்சம் ரூ.5000 பென்சன் வழங்க கோருதல் போன்ற விசயங்களில்  அகில இந்திய,மாநில தலைவர்கள் விரைந்து  செயல்பட்டு உதவுங்கள்.

 .இலாகாவின்  காலி பணியிடங்களில் தற்காலிகமாக பணி புரிய, விருப்பமுள்ள GDS ஊழியர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் படி செய்யுங்கள்.

 அவுட்சோர்ஸ்  இடங்களில் எந்த மாதிரி கால நேரங்களில் GDS ஊழியர்கள் பணி புரிய வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் விளக்கி கூறுங்கள். உதாரணமாக S.O  க்களில் காலை 8.30 மணி முதல்10.30 மணி வரையிலும், பின்  மீண்டும் மாலை 3.00 மணி  முதல் 5.00 மணி வரையிலும்  பணிகளில் உதவி செய்வதன் மூலம்  GDS ஊழியர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதையும்அது போலவே CPC, BPCக்களில் பகுதி நேரங்களில் எப்படி வேலை செய்வது பற்றியும் கூறுங்கள்.

விருப்பமுள்ள GDS ஊழியர்களை கொண்டு காலையில்  4 மணி நேரம் அல்லது மாலையில் 4 மணி நேரம் ஷிப்ட் முறையில் பிரித்து பயன்படுத்துவதன் மூலம்  இலாகாவிற்கு வருமானம் வருமே ஒழிய வருமான இழப்பு ஏற்படாது.

2006க்கு பின் பணியில் சேர்ந்த GDS BPM தோழர்களுக்கு நடராஜமூர்த்தி கமிட்டி படி TRCA  SCALE REFIXATION  செய்ததில் ஒவ்வொரு டிவிசனிலும் ஒவ்வொரு மாதிரி செய்துள்ளது, அதற்கு பின் நடந்த பைனியல் ரிவீயுவில் டைரக்ரேட் ஆர்டர் 16-12-2010 ரிவிசன் ஆப் நியூ நார்ம்ஸ் பின்பற்றாதது  மற்றும் TRCA குறைவது  தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வினை உடனடியாக  பெற்று தாருங்கள்

No comments:

Post a Comment