Thursday, August 14, 2014

p3 CIRCLE UNION ON STAFF MATTERS

          சென்னை GPO

சென்னை GPO  வில் எழுத்தராக பணி புரிய தேர்வுக்குள்ளான தோழியர். R . ரிஸ்வான் பேகம் என்பவர் INDUCTION  TRAINING  இல் PTC , மதுரையில் இருந்த போது கடந்த 06.08.2014 அன்று திடீரென்று அவரது கணவர் அகால மரணமடைந்ததால் விடுப்பெடுத்து சென்னை வந்தார்.  அவரது கணவரின் இறுதிச் சடங்குகள் முடிந்து மீண்டும் அவர் PTC க்கு செல்லக் கோரியபோது , அவருக்குண்டான இரண்டு நாள்  விடுப்பு தாண்டியதால் அனுமதிக்க இயலாது என்று  PTC  யில் மறுத்துவிட்டனர்.  அதிகப்படியான விடுப்புக்கு ஈடாக பணிப்  பயிற்சி நீட்டிப்பு செய்யக் கோரியும் நிர்வாகம் ஏற்கவில்லை. 

இந்தப் பிரச்சினை குறித்து அந்தத் தோழியர் நமது GPO கிளைச் செயலர் தோழர். முரளி மூலம்  மாநிலச் சங்கத்தை அணுகி உதவிட வேண்டினார்.  எனவே நம் மாநிலச் செயலர் விடுமுறை நாளில் தொலைபேசியில்  நமது PMG CCR  அவர்களை அழைத்துப் பேசி  உதவிட வேண்டினார். PMG CCR அவர்களும்  PTC  நிர்வாகம் தனது    நிர்வாக வரம்புக்குள் இல்லையென்ற போதிலும் , பாதிக்கப்பட்ட பெண் தோழியரின்  சூழ்நிலையை கருத்தில் கொண்டு  அவருக்கு உதவிடவேண்டி  உடன் PTC  நிர்வாகத்துடன் பேசி அதற்கான ஆவன ஏற்பாடுகளை செய்தார்.  

அந்தத் தோழியரும்  தனது தந்தையாருடன் உடன் கிளம்பி மதுரை சென்றார். அங்கு  அவர் மீண்டும் பணிப்  பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப் பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார் என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிரச்சினை    தனது அதிகார வரம்புக்குள் இல்லாத போதிலும்,  சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களிலும்  கூட, இதில்  ஈடுபட்டு உதவிய  PMG, CCR  அவர்களின் மனிதாபிமானம் பாராட்டத்தக்கது. PMG, CCR  திரு . மெர்வின்  அலெக்சாண்டர் அவர்களுக்கு  அந்த பெண் ஊழியர் சார்பிலும், சென்னை GPO கிளை சார்பிலும்  நம் மாநிலச் சங்கம் சார்பிலும்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

திருப்பத்தூர்  கோட்டம் 

திரு . அய்யாக்கண்ணு அவர்கள் திருப்பத்தூர் கோட்ட கண்காணிப் பாளராக இருந்த காலத்தில் நமது NFPE  தொழிற்சங்க இயக்கத் தோழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட  நிர்வாக வன்முறை மற்றும் தொழிற்சங்கத் தோழர்கள் பழி வாங்கப் படுவது  குறித்து  பல செய்திகள் அந்த நேரத்தில் நம் மாநிலச் சங்கம் வெளியிட்டதை நினைவு கொள்க. அந்த நேரத்தில் PMG, WR ஆக இருந்த திரு. நந்தா அவர்களிடம் பிரச்சினையை எடுத்துச் சென்று பேசி பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும்,  பொய்யான குற்றச் சாட்டுக்கள் கூறி அல்லது சிறிய பிரச்சினைகளுக்கு கூட   நம் தோழர்கள் பலர் விதி 16 மாற்றும் விதி 14 இன் கீழ் குற்றப்பத்திரிகை அளித்து  தண்டனை வழங்கப் பட்டார்கள்.

அதில் தோழர். ராஜேந்திரன் என்பவர்  இளைய தோழர்.   அவர் மீது  ஒரு சிறிய தவறுக்கு மிகப் பெரிய அளவில் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு விதி 14 இன் கீழ்  அவருக்கு  COMPULSORY  RETIREMENT  வழங்கப்பட்டது.  இப்படி இளைய வயதிலேயே பாதிக்கப்பட்ட தோழரின் APPEAL  கூட  மண்டல அலுவலகத்துக்கு  உடன் அனுப்பப்படவில்லை.  

கடந்த இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான  பேட்டியின் போது இந்த  பிரச்சினை குறித்து  நாம்பேசி அந்தத் தோழர் பழி வாங்கப் பட்டதை எடுத்துக் கூறினோம். அதன் மீது  தற்போது ஆவன நடவடிக்கை எடுக்கப் பட்டு  அந்தத் தோழரின் தண்டனை குறைக்கப்பட்டு  அவர் தற்போது  பணியில் சேர உத்திரவிடப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பிரச்சினையின்  தன்மையை உணர்ந்து மனிதாபிமானத்துடன்  நடவடிக்கை எடுத்த  மேற்கு மண்டல அதிகாரிகளுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றி. 

No comments:

Post a Comment