Sunday, August 10, 2014

KUMBAKONAM DIVISIONAL CONFERENCE

KUMBAKONAM   DIVISIONAL   CONFERENCE


குடந்தை அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 41 ஆவது கோட்ட மாநாடு  கடந்த 03.08.2014 ஞாயிறு அன்று குடந்தை தலைமை அஞ்சலக வளாகத்தில் அதன் கோட்டத் தலைவர் தோழர். S . பிச்சையப்பன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . கொடியேற்று நிகழ்ச்சிக்குப் பின்னர்  கோட்டச் சங்க உதவிச் செயலர் தோழர். C . பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின . ஈராண்டு அறிக்கை , வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப் பட்டபின்னர்  நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் நிர்வாகிகள் தேர்தலை  நடத்தி வைத்தார். கோட்டத் தலைவர் மற்றும் செயலர் பதவிகளுக்கு மட்டும் போட்டி இருந்தது .  கோட்டத் தலைவர்  29 வாக்குகள் வித்தியாசத்திலும் , கோட்டச் செயலர் 51 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றனர். தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகள் :-

கோட்டத் தலைவர் : தோழர்.  C . பிரபாகரன் , M .E ., குடந்தை HO 

கோட்டச் செயலர் : தோழர். R . பெருமாள்,  P .A ., குடந்தை HO 

நிதிச் செயலர் : தோழர். K . தனுசுராணி, P .A ., குடந்தை HO 

மாநாட்டில்  அஞ்சல் மூன்று மாநிலச் செயலர்  தோழர்  J .R ., மத்திய மண்டலச் செயலர் தோழர்.R . குமார்,  GDS  சங்க மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் ,  நாகை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர்.  S . மீனாட்சி சுந்தரம்,  தஞ்சை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். R . செல்வகுமார் ,  பாபநாசம் அஞ்சல் மூன்று கிளைச் செயலர் தோழர். J . குணசீலன்,  குடந்தை அஞ்சல் நான்கு கோட்டச் செயலர் தோழர். S . ஐயப்பன், குடந்தை அஞ்சல் GDS கோட்டச் செயலர் தோழர். B . தம்பிராஜ்,  மயிலாடுதுறை கோட்ட பாசறை செயலர் தோழர். K . துரை  ஆகியோர் கலந்துகொண்டு   வாழ்த்தினர்.

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின்  மனமார்ந்த வாழ்த்துக்கள் .

மாநாட்டில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்  சில :-













No comments:

Post a Comment