Wednesday, August 12, 2020

Gds security bond recovery issue taken by FNPO P4 circle secretary reg.

 

Gds ஊழியர்களுக்கு இந்த கொரானா காலத்தில் செக்யூரிட்டி பாண்ட் கட்ட சம்பளத்தில் பிடித்தம் செய்து கஷ்டப்படுத்துவதை பார்த்து நமது FNPO P4 மாநில செயலராளர் சுகுமாறன் அவர்களே முன்வந்து CPMG-TN அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள விபரம் உங்கள் பார்வைக்கு.

சேலம் செக்யூரிட்டி பாண்டு தொகை 10,000 லிருந்து 1 இலட்சமாக உயர்த்தப்பட்டதால்  gds ஊழியர்களிடமிருந்து பத்தாயிரம் பிடித்து வருகின்றனர்.gds ஊழியர்கள் சம்பளமோ  ரூ.10,000/-, 12,000/- ,14,500/-  + D.A என்ற அடிப்படையில் பெற்று வருகின்றனர். சில டிவிசன்களில் பத்தாயிரம் பிடித்து விட்டனர். சில டிவிசன்களில் ரூ.3,000, 4,000 என்று அந்தந்த HPO-ல் பிடித்து வருகின்றனர்.

சம்பளத்தில் பிடிப்பது தொடர்பாக தகவலை  GDSஊழியர்களுக்கு தெரிவிக்கவில்லை.அவர்களுக்கும் செக்யூரிட்டி பாண்டுக்கான சம்பளபிடித்தம் பற்றி தெரியாது. அவர்கள் மாதக்கடைசியில்  சம்பளம் வாங்கும்போது தான்  தெரிந்து கொண்டனர்.இது தவறான நடைமுறை.

ஊழியர்களை கொரானா  பரவல் மிகவும் அச்சுறுத்தி வருகிறது.போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை செய்து வருகின்றனர். தொலைதூரத்திருந்து அதிக பணம் செலவு செய்து தங்களுடைய அலுவலகம் வந்து செல்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென்று கூடுதலாக அவர்களது சம்பளத்தை பிடிப்பதால் அவர்களால் அதை  சமாளிக்க முடியாது.

எனவே, எங்களது யூனியன் நமது CPMG-TNஅவர்களை இந்த பிரச்சனையில் தலையிட்டு செக்யூரிட்டி பாண்டு தொடர்பாக பிடித்த பணத்தை மீண்டும் GDSஊழியர்களிடமே தருமாறும், கொரானா காலம் முடிந்தபின்  10 தவணைகளில்  அதனை பிடித்திட கேட்டுக்கொள்கிறது.இது நிச்சயம் GDSஊழியர்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்.இது தொடர்பாக சாதகமான ஆர்டரை அளிக்க வேண்டுகிறேன்.🙏

இப்படிக்கு

P.சுகுமாறன்

FNPO  P4  மாநில செயலாளர்

பாண்டிச்சேரி.


No comments:

Post a Comment