Wednesday, July 27, 2016

7வது ஊதியக்குழு ஒரு பார்வை..

7வது ஊதியக்குழு ஒரு  பார்வை



     கொடுப்பதை   வாங்கிக்கொள்      --   மத்தியஅரசு         
         
குறைவானதை ஏற்க மாட்டோம்     ----       ஊழியர் சங்கங்கள் 
          
கிடைப்பதை கெடுத்து விடாதே !    ----       ஊழியர்கள் 


ஆரூடத்தை கடந்து ,அச்சத்தை போக்கி ,அமைதியாக ,ஊதியக்குழுவின் பரிந்துரையை அப்படியே உத்தரவாக வெளிவந்துவிட்டது .ஆம் ஏழாவது ஊதியக்குழுவின் உத்தரவு 25.07.2016 அன்று கெசட்டட் அறிவிப்பாக வந்தது .

1.ஊதியநிர்ணயம் --  31.12.2015இல் அடிப்படைஉதியம் + தகுதியூதியம்   இதை 2.57 மடங்கினால் பெருக்கி அதற்கு அடுத்தநிலை PAY MATRIX படி நிர்ணயிக்கப்படும் .


2.புதியஊதியம்  01.01.2016 முதல் அமுல்படுத்தப்படும் 


3.நிலுவைத்தொகை  2016-2017 நிதியாண்டில்  வழங்கப்படும் 


4.ஆண்டு ஊதியஉயர்வு  ஜனவரி 1/ஜூலை இதில் ஒன்று ஊழியர்களின் பணிக்கு சேர்ந்தநாள் அல்லது MACP பதவி உயர்வு நாள் அடிப்படையில் வழங்கப்படும் .


5.பஞ்சபடியை தவிர இதர அலவன்சகள் அனைத்தும் உயர்த்தப்படாத ஊதியத்தில் என்ன வாங்கினோமோ அவை வழங்கப்படும் .


6.மெடிக்கல் ,LTC ,TOUR TA   போன்றவைகள் நீடிக்கும் .


7.CGEGISபிடித்தம்  பழைய முறையே தொடரும்  


8.புதிய பென்ஷன் திட்டத்தை முறைப்படுத்த (மாற்ற அல்ல )DOP & Training ,மற்றும் Finance செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் .



9.வழக்கம்போல் அனாமலி கமிட்டி அமைக்கப்படும் ( வழக்கம்போல் பல ஆண்டுகளுக்கு பிறகு அனாமலி கமிட்டி கொடுக்கும் பரிந்துரை அடுத்த அதாவது எட்டாவது ஊதியக்குழுவிற்கு அனுப்பப்படும் --இது கடந்தகால (கசந்தகால )வரலாறு .

No comments:

Post a Comment