Saturday, September 28, 2019




சுகன்ய சம்ரிதி திட்டம் (SSA ) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால்  ஜனவரி 22 தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.  இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட  2 பெண்குழந்தைகளுக்காக அவர்களது பெற்றோரில் யாராவது ஒருவர் பெயரிலோ அல்லது பாதுகாப்பாளர் பெயரிலோ குறைந்தபட்சமாக தற்போது ரூபாய் 250 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 250 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரை   100-ன் மடங்குகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் செலுத்தலாம்.

 ஒவ்வொரு ஆண்டிற்கும் குறைந்தபட்சம் ரூ.250 கட்டத்தவறினால் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.50 பெனால்டி சேர்த்து   ரூ.300 வீதம் கட்ட வேண்டும். மொத்தம் 15ஆண்டுகள்  பணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு 7 ஆண்டுகள் வரை திட்டம் தொடரும். ஆனால் பணம் கட்ட வேண்டிய தில்லை/அனுமதியும் இல்லை.

 இந்த கணக்கினை  ஒரு  பெண் குழந்தை பிறந்த அன்று தொடங்கியிருந்தால்  அதன் 21வது வயது முடிவில்  முதிர்வு தொகையை பெறலாம். கணக்கை முடிக்கும் போது அந்த பெண் குழந்தையின்  அப்போதைய புதிய ID proof, தர வேண்டும்

அந்த பெண் குழந்தை இறந்து விட்டாலோ அல்லது Non Residence of India ஆனாலோ அல்லது திருமணம் நடந்தபின்போ இத்திட்டம் உடனடியாக முடிவுக்கு வந்து விடும். திருமணம் நடக்க உள்ள ஒரு மாதத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடிந்து 3 மாதங்களுக்குள் விண்ணப்பித்து விட வேண்டும்.

 கணக்கு தொடங்கி 5 வது நிதி ஆண்டு முடிந்ததும் உயிருக்கு ஆபத்தான நோய் காரணமாக பணம் கட்ட முடியவில்லை என்றாலோ அல்லது பெற்றோர், பாதுகாவலர் இறந்து போனாலோ டிவிசனல்  சூப்பிரண்டு அவர்களின் அனுமதி பெற்று கணக்கை  முடித்து கொள்ளலாம். 

தற்போது ஆண்டுக்கு 8.4%  கூட்டுவட்டி வழங்கப்படுகிறது. இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது.  மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவு அடையும்போது  அல்லது 10-ம் வகுப்பு முடித்ததும் அவரது  மேற்படிப்பு கல்வி  செலவுக்காக முறையான கட்டண ரசீதுகள்,வயது சான்றிதழ் சமர்பித்தால் முந்தைய ஆண்டின் முடிவில்  கணக்கில் உள்ள தொகையில் 50%  ஒரு ஆண்டுக்கு ஒரு முறை என்று 5 முறை  வரை வித்ராயல் எடுத்து கொள்ளலாம். 

இத்திட்டத்தில் வாரிசு கிடையாது. கணக்கினை வேறு ஆபிஸிற்கு மாற்ற Address proof கொடுத்தால் இலவசம். இல்லையென்றால் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். டூப்ளிகேட் பாஸ் புக் வாங்க போஸ்ட்மாஸ்டரிடம்  ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

1 comment:

  1. Thanks for the blog loaded with so many information
    click here for josaa 2020

    ReplyDelete