Thursday, September 19, 2019

*CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE (CEFA) FOR GDS*

*கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் GDS  ஊழியர்களுக்கு குழந்தைகள் கல்வி செலவுகளுக்காக CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE திட்டம்   அமல்படுத்தப்பட்டுள்ளது.*

*CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE ஆனது GDSஊழியர்களின்  இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இரண்டாவது குழந்தை இரட்டை அல்லது பல குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தைகளுக்கும் CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE வழங்கப்படும்.*

*CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டொன்றுக்கு ரூ 6000 ஆகும்.இது நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும்.* 

*நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாகவோ அதிகமாகவோ குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்து இருப்பினும் குழந்தை ஒன்றுக்கு ரூ6000 மட்டுமே வழங்கப்படும்.*

*CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE பெறுவதற்கு குழந்தைகள் முந்தைய  கல்வி ஆண்டில் படித்த பள்ளி அல்லது கல்வி நிறுவன தலைவரிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் போதுமானது . மேற்கண்ட சான்றிதழ் குழந்தைகள் முந்தைய கல்வி ஆண்டில் பள்ளி அல்லது கல்வி நிறுவனத்தில் படித்ததை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

மேற்கண்ட சான்றிதழ் பெற முடியாவிட்டாலும் குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டு அல்லது பணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சுய ஒப்பமிட்டு சமர்பித்து CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE பெற்றுக் கொள்ளலாம்.*

*கல்வி ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் . CEFA பெற  ஒரே விண்ணப்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் விண்ணப்பித்தால் போதுமானது. இரண்டாவது குழந்தை இரட்டை குழந்தைகள் அல்லது  பல குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் வரையறுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து இணைக்க வேண்டும்.*

*GDS ஊழியர்களின் கணவன் அல்லது மனைவி  அரசு ஊழியராக இருப்பின் யாரேனும் ஒருவர் மட்டுமே CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE*
*பெற விண்ணப்பிக்க முடியும். ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு நிதியாண்டில் முடிவிலும் CEFA பெற விண்ணப்பிக்கலாம்.*

*GDS ஊழியர்களின் குழந்தைகள்  ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியடைந்தாலும் CEFA நிறுத்தப்படுதல் கூடாது.*

*CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE தொகை பெறுவதற்கு GDS ஊழியர்களின் குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி/ கல்வி நிறுவனங்களில் படித்திருக்க  வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம்/பள்ளி என்பது அரசுப்பள்ளிகளாகவோ மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் பள்ளிகளாகவோ பள்ளிகள் இடம்பெற்றிருக்கும் இடங்களுக்கான  கல்வி அங்கீகார ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளாகவோ இருக்க வேண்டும்.*

*அஞ்சல் மற்றும் தொலைதூரக் கல்வி பயிலும் GDSஊழியர்களின் குழந்தைகளுக்கும் CEFA தொகை வழங்கப்படும். ஆனால் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள மற்ற நிபந்தனையின் அடிப்படையில்  வழங்கப்படும்.*

*GDS  ஊழியர்கள் பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கான CEFA வழங்கப்படும். ஆனால் சில நிபந்தனைகளின் அடிப்படையில் அது வழங்கப்படும்.*

*இறந்த GDS ஊழியரின் கணவன் அல்லது மனைவி GDS ஊழியராகவோ அல்லது மத்திய ,மாநில அரசுப் பணிகளிலோ மத்திய மாநில தொடர்புடைய அரசு பணிகளிலோ,உள்ளாட்சி பதவிகளிலோ இருக்க கூடாது. GDS ஊழியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாலோ  ஓய்வு பெற்றாலோ பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அந்தக் கல்வி ஆண்டுக்கான CEFA தொகை வழங்கப்படும்.*

*மழலை வகுப்புகள்(LKG,UKG) முதல் 12-ஆம் வகுப்பு முடிய  GDS ஊழியர்களின் குழந்தைகளுக்கு CEFA தொகை வழங்கப்படும். குழந்தைகளின் 20 வயது அல்லது பன்னிரண்டாம் வகுப்பு இதில் எது  முதலில் வருகிறதோ அதுவரையில் CEFA வழங்கப்படும்.*

*GDS ஊழியர்கள் PUTOFF DUTY , விடுப்பு ஆகியவற்றில் இருந்தாலும் CEFA தொகை வழங்கப்படும்.*

*சேவை காலமாக கருதப்படாத காலங்கள் இருப்பின் அந்த காலங்களுக்கு CEFA வழங்கப்படாது.*

*GDS ஊழியர்களின் குழந்தைகள் பத்தாம் வகுப்புக்கு பிறகு 2 ஆண்டு படிக்கக்கூடிய டிப்ளமோ/ ஐடிஐ /சான்றிதழ் படிப்புகளுக்கும் CEFA  தொகை வழங்கப்படும். ஆனால் பட்டய/சான்றிதழ் படிப்புகளுக்கு பிறகு மீண்டும் 11ஆம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு படிப்பவர்களுக்கு CEFA வழங்கப்படாது.*

*CEFA திட்டம் 01.10.2019 முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிதியாண்டில் மட்டும் ஒரு குழந்தைக்கு ரூ 3 ஆயிரம் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட CEFA தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல்  குழந்தை ஓன்றுக்கு ரூ 6000 என்ற அடிப்படையிலேயே CEFA வழங்கப்படும்.*


*நன்றி- விஜய்.*
****
For more details – go through the Office Memorandum dated 18-09-2019












No comments:

Post a Comment