PJCA சிறப்பு அறிக்கை நாள் : 3.12.2018.
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
NFPE JCA. FNPO
அஞ்சல் RMS ஊழியர் கூட்டுப் போராட்டக்குழு,
தமிழ் மாநிலம், சென்னை - 600 002 .
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
PJCA சிறப்பு அறிக்கை நாள் : 3.12.2018.
~~~~~~~~~~~~~~~~
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
நமது இரண்டாவது கட்டப் போராட்டத்தை ஒட்டி CPMG அலுவலகத்திலிருந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறும், போராட்டத்தை ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொண்டதால் தமிழக PJCA(NFPE/FNPO) சார்பில் இன்றுநமது 18 அம்சக் கோரிக்கைகளின் மீது பேச்சு வார்த்தைக்குச் சென்றோம். DPS GQ தலைமையிலான குழுவை பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்குமாறுCPMG அவர்கள் பணித்திருந்தார். கூட்டம் சரியாக 4.30 க்குத் துவங்கி இரவு 8.15 வரை நடை பெற்றது.
பேச்சு வார்த்தையில் கோரிக்கைகளை பிரதிநிதிகள்
வேகமாக அழுத்திப் பேசியபோதும் நிர்வாகத் தரப்பில்
கூடுமானவரை பிரச்னைகளை தீர்க்கும் விதமாக சுமுகமாகவே பேசினார்கள்.குறிப்பாக DPS HQ அவர்களின் அணுகுமுறை ஆக்கபூர்வமாகவேஅமைந்தது. இடையே இரண்டு முறை DPS HQ அவர்களை தொலை பேசியில் பேச்சு வார்த்தை குறித்து CPMG அவர்கள் விசாரித்த விதம், அவரது அக்கறையை உணர்த்தியது.
சில முக்கிய பிரச்னைகளின் மீது பேச்சு வார்த்தையில் நிர்வாகம் அளித்தபதில் கீழே அளிக்கிறோம்.
Minutes copy வந்ததும் முழு விபரம் தெரிந்து கொள்ளலாம்.
1. ஏற்கனவே உறுதி அளித்தபடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள 2250 கணினிகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டங்களுக்கும் வழங்கிட GeM Portal மூலம் tender கோரப்பட்டுள்ளது. நிச்சயம் எல்லா கோட்டங்களிலும் இந்த மாத இறுதிக்குள் அவை வழங்கப்படும். மேலும் 1063 கணினிகள் வாங்கிட Dte ல் நிதி கோரப்பட்டுள்ளது. அதனைப் பெற விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
2. Bandwidth என்பது அனைத்து(பழைய)'C' மற்றும் 'B' Class அலுவலகங்களில்512 Kbps ஆக உயர்த்தியுள்ளதாக
SIFY நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது.அடுத்த நிலை அலுவலகங்களில்2 MBPS வரை கொடுக்கப் பட்டுள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.இவை Dvnஅலுவலகத்தில் . e-graph மூலம் Monitor செய்யப்படுகிறது. இதில் புகார் இருப்பின் நாளை மாலைக்குள் உயர்த்தப்படாத அந்தந்த அலுவலக பெயர் தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் SIFY நிறுவன ஒப்பந்தம் காலவதியானதைத் தொடர்ந்து BSNL நிறுவனத்துடன் தற்போது நேரிடையான ஒப்பந்தமிடப்பட்டுள்ளது
3. SAP/DPMS/ RICT மீதான software பிரச்னைகளை களைந்திட ஏற்கனவே கோட்ட/மண்டல/மாநில அளவிலான கமிட்டிகள் அமைக்கப்பட்டு புகார்கள் பெற்று அதன் மீது அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Main Server பிரச்னை குறித்து Dte க்கு தல மட்ட நிலவரங்களை தெளிவாக்கி அறிக்கை அனுப்பப்படும்.
4. RICT swapping of Network குறித்து ஏற்கனவே உத்திரவிடப் பட்டுள்ளது. அது குறித்து கோட்ட அதிகாரி மூலம் Vendor ஐ அணுகிடலாம். எனினும் மீண்டும் ஒரு முறை அறிவுறுத்தப்படும்.
5. காலிப் பணியிடங்களை தீரமானிக்க அமைக்கப்பட்ட கமிட்டி துரிதமாக செயல்பட்டு வருகிறது. விரைவில் அதன் அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
6. எழுத்தரில் கேடர் சீரமைப்பு உத்திரவுகள் அனைத்தும் டிசம்பர் 15 லிருந்து டிசம்பர் 30 க்குள் இடப்பட்டு பணிகள் முடிக்கப்படும்.
7. இதன் மூலம் கிடைக்கும் காலிப் பணியிடங்களில் 50% தற்போதையLGO to PA தேர்வுக்கு சேர்க்கப்படும். தேர்வை ஒத்திவைத்திட Dte ஒப்புதல் வழங்கவில்லை.
8. HSG I NFG உத்திரவு முன் தேதியிட்டு விரைவில் வழங்கப் படும்.
9. தபால்காரர்களுக்கு 1.1.96 முதலாக வழங்க வேண்டிய உயர் ஊதியம் வழங்கிடCIFA ஒப்புதல் அளிக்கவில்லை, இருந்தாலும் காத்திருக்காமல் Dte உத்திரவை அமல் செய்திட உரிய உத்திரவு வழங்கப் படும்.
10. GDS ஊழியருக்கு TRCA குறைப்பு, combined duty allowance வழங்குதல், composite allowance வழங்குதல் குறித்த உத்திரவுகள் சரியாக நடைமுறைப் படுத்த உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட ஊழியர் இதன்மீது மண்டல அலுவலகங்களுக்கு மனு அளிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள்.
11. GDS substitutes களுக்கு சில இடங்களில் Minimum
of the TRCA வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு அந்தந்த கோட்டங்களுக்கு பாதிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கவும் அதன் நகலை மண்டல அலுவலகத்திற்கு அளித்தால் உடன் பரிசீலிக்கவும் அறிவுறுத்தப்படும்.
12. தபால்காரர்களுக்கு பணி நேரத்தில் IPPB வேலைகள் திணிக்கப் படாது. Incentive அடிப்படையில் IPPB பணிகள் செய்திட கீழ்மட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.
13.தபால்காரர் விடுப்புகளில் substitute வழங்கிட உரிய உத்திரவு வழங்கப்படும்.
14. எழுத்தர் காலிப்பணி யிடங்களில் substitute வழங்கிட இலாக்கா ஒப்புதல் தராததால் இதை செயல்படுத்திட இயலாது என்று மறுக்கப்பட்டது. இதன்மீது தீர்வு ஏற்படவில்லை எனில் நிச்சயம் அடுத்தகட்டம் வேலை நிறுத்தத்திற்கு செல்வோம் என JCA சார்பில் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என உறுதி அளிக்கப் பட்டது.
15. Indoor Staff க்கு Individual Target கொடுத்து நிர்ப்பந்திப்பது குறித்தும், இதன்மீது தென் மண்டல
உத்திரவு மற்றும்தென் சென்னை/வடசென்னை/திருவண்ணாமலை கோட்ட APAR பதிவுகள் குறித்தும் நீண்ட விவாதம் நடைபெற்றது. இது குறித்து நிச்சயம் உரிய அறிவுத்தல் செய்யப்படுமென்றும் தென் சென்னை, வடசென்னை, திமலை கோட்டப் பிரச்னைகள் சரிசெய்யப்படும் என்றும் உறுதியளிக் கப்பட்டது.
16. கோட்ட/மண்டல/மாநில அலுவலகத்தில் அளவுக்கு அதிகமாக மற்றும் நீண்டகாலம் Deputation ல் இருப்பவர்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென பரிசீலனை செய்திட ஊழியர் தரப்பையும் உள்ளடக்கி கமிட்டி அமைக்கப்படும்.
17.RMS பகுதியில் OSA வழங்குவது குறித்து Dte க்கு பிரச்னை எடுத்துச் செல்லப்படும். இடைக் காலத்தில் OSA க்கு பதில் TA/DA வழங்க ஆவன செய்யப்படும்.
18. தபால்காரர்/MTS பதிலியாகப் பணியாற்றும் OS களுக்கு மறுக்கப்பட்ட உயர் ஊதியத்துக்கு பதிலாக மத்திய அரசின் Minimum wage Act அடிப்படையில் மத்திய அரசின் Chief Labour Commissioner உத்திரவு அமல் படுத்திட ஆவன செய்யப்படும்.
19. SPCC மேனேஜர், சென்னை 16 குறித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
20. எலக்டிரீஷியன் பதவிகளுக்கு உரிய Helper வெளியாட்கள் அமர்த்துதல் மூலம் உதவப்படும்.
இதர பிரச்னைகள் குறித்து Minutes வந்தவுடன் தெரிவிக்கப்படும்.
பேச்சுவார்த்தைமிகவும் சுமுகமாக நடைபெற்றதாலும், வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பெருமளவில் தீர்வுக்கான பதிலளித்ததாலும் 4.12.18 அன்று CPMG அலுவலக வாயிலில் நடைபெற இருந்த தார்ணா போராட்டம் ஒத்திவைக்கப் படுவதாக தமிழகPJCA வில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
நமது JCA போராட்டத்திற்கு ஆதரவளித்த, கலந்துகொள்ள வெளி மண்டலங்களிலிருந்து கிளம்பி திரும்பிய, மற்றும் நாளைய போராடடத்தில் கலந்து கொள்ள இயக்கப் பணியாற்றிய நிர்வாகிகள், தோழர்கள்,தோழியர்கள் அனைவருக்கும்தமிழக JCA சார்பில் நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் ஊழியர் நலனில் அக்கறை கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகாண பணித்திட்ட CPMG அவர்களுக்கும், முழுமனதுடன் இரவு 8.15 வரை ஈடுபட்டு பேச்சு வார்த்தை நடத்தி பல முன்னேற்றமான நிலைபாட்டை எடுத்த DPS HQ அவர்களுக்கும், அவருக்கு உதவி புரிந்த ADSR அவர்களுக்கும் நம் JCA வின் சார்பில் நெஞ்சு நிறை நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதியாக, உறுதியளித்த அனைத்தையும் சரியாக நிறைவேற்றி ஊழியர் மத்தியில் அமைதியை நிலை நிலைநாட்டிட வேண்டும் என மாநில நிர்வாகத்தை வேண்டுகிறோம்.
நன்றி !
தோழமையுடன்,

தமிழ் மாநிலம்.

No comments:
Post a Comment