INDEFINITE STRIKE BY GDS UNIONS -- MAKE IT A GRAND SUCCESS
மாநில செயலாளர், தோழர்.R.தனராஜ் அவர்களின் அறிக்கை,...,.
தோழர்களே வணக்கம்.
நமது பொதுச்செயலாளர் தோழர் R.பாண்டுரங்கராவ் 18.05.18 இன்று Adl DG மற்றும் DDG (SR & Legal) முன் நடந்த கூட்டத்தில் சுமார் 1/2 மணி நேரம் பேசிய தகவல்.
எங்களது வேலை நிறுத்தம் வெற்றி பெற அல்லது ஊதியக்குழு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வேலை நிறுத்த அறிக்கை கொடுக்க வில்லை, இலாக்கா மற்றும் அரசு எங்களை திரும்பிப் பார்க்க வேண்டும், திரு. நடராஜமூர்த்தி ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட பின் ஊழியர்கள் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் என தெரிவித்து பல இயக்கங்களை செய்தும் எங்களை திரும்பிப் பார்க்க வில்லை,
ஊதியக்குழு நடைமுறைப் படுத்திய பின் அதிலிருந்து பணி ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்று வரை பணப் பட்டுவாடா ஆகாமல் இருக்கிறார்களே, ஊதிய நிர்ணயத்தில் மாற்றம் தேவை புள்ளி மாற்றம் தேவை, தொழிற்சங்க அங்கீகாரம் தொடர்பான கோரிக்கை கொடுத்தோமே இதற்காக சம்மேளனத்தின் இயக்கங்களை திரும்பிப் பார்த்தீர்களா? அதற்கான போராட்டம்
, GDS ஊழியர்களின் கடுமையான உழைப்பின் மூலம் பல லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டதே? அவர்களுக்கு ஊதியத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டது, ஊதியம் படிப்படியாக குறைந்து இன்று வரை வழங்கப்படுகிதே? இவையெல்லாம் சுட்டிக் காட்டி இயக்கங்களை நடத்தியதை திரும்பிப் பார்த்தீர்களா? அதற்கான போராட்டம்,
1.1.2016 க்கு பிறகு பணி ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஊதியக்குழு நடைமுறைப்படுத்துவதில் நிர்வாகம் ஏற்படுத்தும் கால தாமதத்தால் முழுமையான பயன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே ஆகவே தான் இந்த போராட்டம் என தக்க விளக்கங்களை கொடுத்து விரிவாக பேசி உள்ளார். ஆகவே நிர்வாகம் குறிப்பிட்ட நாட்களில் அமுல்படுத்தப்படும் என எழுத்து பூர்வமாக கொடுத்தால் ஒழிய திரும்பப்பெற இயலாது என்று கூறி சிறப்பாக பதிவு செய்து உள்ளார்.செயலாளருக்கு நமது வாழ்த்துக்கள்.
அனைவரும் திரும்பிய பின் மீண்டும் 21.05.18 காலை 11 மணிக்கு துறைச் செயலாளர் முன் பேச்சு வார்த்தை நடத்திட அழைக்கப்பட்டு உள்ளார்கள்.
ஆகவே நமது கூட்டு வேலை நிறுத்த இயக்கம் மேலும் தீவிர படுத்தப்பட வேண்டும் என மாநிலச் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
நம்முடைய வேலை நிறுத்தம் வெற்றி பெற இலாக்கா ஊழியர்கள் நிச்சயம் துனை இருக்கிறார்கள் , அதற்கான ஆயத்த பணிகளை NFPE சம்மேளன உறுப்பு சங்கங்களின் மாநிலச் செயலாளர்கள் நம்மை வழி நடத்தி செல்வார்கள், தொடர்ந்து பயணிப்போம்... மாநிலச் செயலாளர் AIPEU GDS தமிழ் மாநிலம்
No comments:
Post a Comment