Tuesday, November 28, 2017


இபி எப்   ஓய்வூதிய திட்டத்தில் கடைசியாக வாங்கிய சம்பளத்தில்
பாதியை பென்ஷனாக வாங்கலாம்.

புதுடெல்லி, நவ. 26:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபி எப்) ஓய்வூதிய திட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகளை உச்சநீதி மன்ற தீர்ப்பின் மூலம் உடைத்து, தனி யார் நிறுவன ஊழியர் ஒருவர் மாதம் ₹ரூ .30,592 ஓய்வூதியம் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறார்.

தனியார்  நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இபி எப் திட்டத் தில் மாதந்தோறும் பணம் செலுத்தி வருகின்றனர். ஊழியர்  சம்பளத்தில் அடிப்படை  சம்பளம்  மற்றும் டிஏ.வை மட்டும் கணக்கிட்டு அதில் 12 %, நிறுவனத்தின் சார்பில் 12 %  ஊழியரின் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த  இபி எப் திட்டத்தில் ஊழியர்களுக்கான  ஓய்வூதிய திட்டமும் உள்ளது. நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் 12 %-ல் 8.33 %, ஓய்வூதிய திட்ட கணக்கில் செலுத்தப்படுகிறது. மீதமுள்ள 3.67 % தொழிலாளரின் வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படுகிறது. ஓய்வு பெற்ற பிறகே, ஊழி யர்களுக்கு  இந்த ஓய்வூதிய பலன் கிடைக்கும். தற்போது, ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.2,372 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இந்த  ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்துவதற்கு மத்திய அரசு உச்ச வரம்பு  நிர்ணயித்துள்ளது. அதன் படி, ஒரு ஊழியர் எவ்வளவு அதிகமாக சம்பளம்  வாங்கினாலும், அதில் ரூ .15 ஆயிரம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த தொகைக்கு மட்டுமே ஒய்வூதியத்துக்கான சந்தாவை செலுத்த முடியும். அதன் படி, தற்போது அதிகப்பட்சமாக  ரூ .1,250 மட் டுமே ஓய்வூதிய திட்டத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது, ரூ .15 ஆயிரத்தில் இது 8.33 %.

இந்நிலையில், முழுச்சம்பளத்தில் உள்ள அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ.வை கணக்கிட்டு, அதில் 8.33 சதவீதத்தை ஓய் வூதிய திட்டத்துக்கு செலுத்துவதற்கான சட்டத்திருத்தம்  கடந்த 1996-ம் ஆண்டு கொண்டு வரப் பட்டது.  இதன்படி, ஒரு ஊழியர் அதிகப்பட்சமாக வாங்கும் சம்பளத்தில் அடிப்படை சம்பளம், D.A-வை  கணக்கிட்டு 8.33 சதவீ தத்தை ஓய்வூதிய திட்டத்துக்கு செலுத்தலாம். இதன் மூலம், ஓய்வுப்பெறும்போது கடைசி யாக வாங்கிய சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாக பெற முடியும்.

ஆனால், இந்த புதிய திட்டத்தின் படி ஓய்வூதிய திட்டத்துக்கு கூடுதல் தொகை செலுத்த ஊழியர்கள் முன்வந்த போதும் வருங்கால வைப்பு நிதி அலுவலகம்  அதை  ஏற்க  மறுத்தது. அதற்கு, ‘இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு , முதல் 6 மாதங்களுக்குள் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே   இத் திட்டம் பொருந்தும்’ என காரணம் கூறியது.

இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.சி.பந்த் அடங்கிய அமர்வு  இந்த வழக்கை  விசாரித்து  கடந்த 4.10.2016-ல், ஊழியர்களுக்கு  சாதகமாக  வரலாற்று சிறப்பு மிக்க  தீர்ப்பை வழங்கியது. அதில், ‘வருங்கால வைப்பு நிதி  கணக்கு வைத்திருப்பவர்கள் தொடர்ந்து 12 % தொகை செலுத்தி வரும் போது, காலக்கெடு முடிந்து விட்டது என்று கூறி, ஓய்வூதிய திட்டத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை மறுப் பது நியாயமற்றது. எனவே, ஏற்கனவே செலுத்தியுள்ள பணத்தில் கணக்கை சரி செய்து கொண்டு அவர்களுக்கு, ஓய்வூதிய தொகையை அதிகரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், அரியானா மாநில சுற்றுலா கழகத்தில் பணியாற்றி 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற பிரவீன் கோலி (62) என் பவர், தனக்கு  ஓய்வூதிய தொகையை அதிகரிக்கக் கோரி  மனு செய்தார். இதில், அவர்  வெற்றி பெற்று  கடந்த 1-ம் தேதி முதல்  தனது கடைசி சம்ப ளத்தில் பாதி தொகையான ரூ .30,592ஐ  ஓய்வூதியமாக பெற்று  சாதனை படைத்துள் ளார். இது 1,200 % அதிகமாகும். இதற்கு முன்பு  அவருக்கு ரூ .2,372 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது.

2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன் இபி எப்-ல் இணைந்த ஊழியர் கள் அனைவரும், ஓய்வூதிய திட்டத்துக்கான பங்களிப்பை உயர்த்தினால் கோலியை போல் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியை பெறுவார்கள். இதன் மூலம் 5 கோடி பேர் பயன் அடைவார்கள்.


தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் கடந்த 1996-ம் ஆண்டு செய்த திருத்தத் தின் படி, முழு சம்பளத்தில் (அடிப்படை மற்றும் டிஏ) ஆகியவற்றில் 8.33 % செலுத்த முடியும்.

பல ஆண்டுகளாக இதை பயன்படுத்திக் கொள்ள தொழிலாளர்கள் முன் வராததால், ஓய்வூதிய பங்களிப்பை உயர்த்தும் வேண் டுகோளை தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபி எப்ஓ) நிராகரித்தது.

உச்ச நீதி மன்ற உத் தரவுப்படி தற்போது ஓய்வூதிய திட்டத்தில் அதிக பங்க ளிப்பை தொழிலாளர்கள் செலுத்த கட்டாயம் அனுமதிக்க வேண்டும்.

2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதிக்கு முன் இபிஎஸ் திட்டத்தில் சேர்ந்த வர்கள் முழுச் சம்பளத்துக்கு ஓய்வூதிய பங்களிப்பை செலுத்தலாம். இதற்கு தொழிலாளர்கள் தனது வேலை பார்க்கும் நிறுவனம் மூலமாக இபி எப் அலுவலகத்தில் விண்ணப்பித்து, சராசரி மாதச் சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாக பெறலாம்.

No comments:

Post a Comment