Thursday, November 16, 2017


நடமாடும் அஞ்சல் அலுவலக சேவை
நடமாடும் அஞ்சல் அலுவலக சேவை சென்னையில் மேலும் 5 இடங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
அஞ்சல் துறை சார்பில் நடமாடும் அஞ்சல் அலுவலக சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. செயின்ட் தாமஸ் மவுண்ட் அஞ்சல் நிலையத்தில் இருந்து வேன் மூலம் இந்த அஞ்சல் சேவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் அஞ்சல் அலுவலக சேவையின் மூலம், ஸ்டாம்ப்புகள் வாங்குவது, பதிவு தபால், விரைவு தபால், மணியார்டர் அனுப்புதல் உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும். அத்துடன், பொதுமக்கள் தங்கள் புகைப்படத்தை அச்சிட்டுத் தரும் மை ஸ்டாம்ப் சேவையை தங்கள் வீட்டருகிலேயே பெற முடியும்.
இந்நிலையில், இச்சேவை சென்னை நகரில் உள்ள மேலும் 5 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி, எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மதியம் 1 முதல் 2 மணி வரையிலும், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மதியம் 2.30 மணி முதல் 3.40 மணி வரையிலும், ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள இன்போசிஸ் நிறுவனம் அருகே மாலை 3.45 மணி முதல் 4.30 மணி வரையிலும், கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும், நங்கநல்லூர் சுதந்திரதின பூங்கா அருகே மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் இந்த நடமாடும் அஞ்சல் சேவை வேன் நிற்கும்.
அந்த சமயத்தில் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தேவையான அஞ்சல் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment