நாட்டின் அதிவேக ரயில் என்ற பெருமையை, ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட டால்கோ எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியாணாவில் உள்ள பல்வால் வரை இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 84 கி.மீ தொலைவை 38 நிமிடத்தில் இந்த ரயில் அடைந்தது.
இதுகுறித்து மண்டல ரயில்வே மேலாளர் பிரபாஷ் குமார் கூறும்போது, “இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சென்று சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. குறைந்த எடை மற்றும் நவீன தொழில்நுட்பம் காரணமாக இது சாத்தியமானது” என்றார்.
இந்த ரயிலில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு நாளும் மணிக்கு 10 கி.மீ. வேகம் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மணிக்கு 170 கி.மீ. வேகத்திலும் புதன்கிழமை மணிக்கு 180 கி.மீ வேகத்திலும் இந்த ரயில் இயக்கப்பட்டது. இனி இந்த ரயிலில் பயணிகளுக்கு பதிலாக மணல் மூட்டைகளை வைத்து சோதனை நடைபெற உள்ளது. இதன்மூலம் வளைவுகளில் ரயிலின் நிலை சோதிக்கப்படும்.
இந்த ரயில் விரைவில் டெல்லி மும்பை இடையே இயக்கப்பட உள்ளது. எனவே அடுத்த சோதனை ஓட்டம் மதுரா மும்பை இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் செல்லும் பாதையில் நடைபெற உள்ளது.
தற்போது ராஜ்தானி எஸ்க் பிரஸ் மணிக்கு 130 கி.மீ. வேகத் திலும் சதாப்தி எக்ஸ்பிரஸ் 150 கி.மீ. வேகத்திலும் இயக்கப் படுகிறது. கதிமான் எக்ஸ்பிரஸ் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சென்று நாட்டின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெற்றிருந்தது. அந்தப் பெருமையை தற் போது டால்கோ எக்ஸ்பிரஸ் முறியடித்துள்ளது.
No comments:
Post a Comment