Sunday, March 8, 2015

போராட தயங்கியவர்கள் வென்றதில்லை, உண்மையாய் போராடி தோற்றவர்கள் யாருமில்லை


     போராட தயங்கியவர்கள் வென்றதில்லைஉண்மையாய்
        போராடி தோற்றவர்கள் யாருமில்லை -  தொழிற்சங்க குறள்.

     குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டாமல், MACAMISH, FINACLE போன்றவற்றில் உள்ள குறைகளால்  தினமும் பொதுமக்களின் பொறுமையை சோதித்து,அவர்கள் அஞ்சல்துறை மீது அதிருப்தி  ஏற்பட்டுஇலாகாவை பயன்படுத்த அஞ்சிவெளியேறுவதையும்இந்த நிலை உடனே களையப்படவில்லையெனில் விரைவில் இலாகாவுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு மூடும் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலையை உணர்ந்து,அல்லல்படும் GDS உள்ளிட்ட அஞ்சல்துறை தொழிலாளர்கள்  துயரங்களை,உணர்வுகளை உடனுக்குடன் சரியான இடத்தில் கொண்டு சென்று தீர்த்து வைக்கும் தமிழ் மாநில  NFPE P3 தொழிற்சங்க தொல்க்காப்பியர் தோழர்J.Rஅவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    அதே நேரத்தில் GDS ஊழியர்கள் படிப்படியாக டிபார்ட்மெண்ட் ஊழியர்களாக, MTS, POSTMAN, P.A போன்ற தேர்வுகளில் கிடைக்கும் இடங்களை அனைத்து GDS ஊழியர்களும் பங்கு பெறும் படி தற்போது உள்ள மேடைக்கோணல் போன்ற அனைத்து தடைகளும் களையப்பட்டால் தான் முடியும்போட்டித்தேர்வு என்று சொல்லிவிட்டு, GDS மட்டும் எழுத இத்தனை தடைகள் ஏன்?மாரத்தான் ஓட்டப்பந்தயம் என்று வந்தப்பிறகு எல்லோரையும் ஓட விட வேண்டும்.B.E, B.Tech  முடித்தவர்களைவிட GDSஊழியர்கள் அதிகமாகவே P.A,தேர்வுகளில் மார்க் வாங்கி உள்ளார்கள் என்பதை கடந்த 2 தேர்வு மதிப்பெண் பட்டியலை பார்த்தாலே தெரியும்.

      வெயில் என்றும் பாராமல்,மழை என்றும் பாராமல்,இவ்வளவு வருசமா டிபார்ட்மெண்ட்க்கு கஷ்டப்பட்டு கைக்காசு இழந்து SB, RD, RPLI, E-POSTபிடித்து சின்சியராக வேலை செய்யும் GDSக்கு. P.A  தேர்வு முறை மறுக்கப்படுவது நீதியா? புரமோசன் ரெசிடுவல் வேகண்ட்தேர்வு முன்பு ஏப்ரல் மாதம் தனியாக நடக்கும்தற்போது மட்டும்எப்படி டைரக்ட் வேகண்ட் தேர்வோடு நடத்த முடியும்.10 லட்சம் தேர்வர்களுடன் போட்டியிடனும்ஆனால் ஜனவரி 1ந்தேதி அன்று 5 ஆண்டு சர்வீஸ் கணக்கீடு எடுக்கனும் என்பது முறையா? . இந்த முறை LGO, POSTMASTER GRADE, IPO தேர்வுகளில் அப்ளை செய்தால் உங்களில் எத்தனை பேர் தேர்வு பெறுவீர்கள் என்பதை மனசாட்சியோடு சொல்லுங்கள். GDS  மேலே வரவே கூடாதா?
   
GDS to P.A தேர்வில் 5 ஆண்டு முடித்தால் வயது வரம்பு 32 என்று தானே இருக்கனும்எப்படி 30க்குள் இருக்கனுமென்று வைத்துள்ளார்கள்இது தவறல்லவா?அங்கேயும் வாய்ப்பு மறுக்கப்படுகிறதுஒவ்வொரு முறை GDS to P.A தேர்விலும் 250, 300 இடங்கள் வீணாக GDSல் தகுதியான ஆளே இல்லையென்று சொல்லப்பட்டு பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.இதை பலமுறை GDSNFPE-KUMBAKONAM சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.  2 year ITI, DIPLOMA,DEGREE முடித்த எத்தனையோGDS உள்ளார்கள்அவர்கள் பங்கு பெற்றாலே இத்தனை இடங்கள் வீணாக டைரக்ட் வேகண்டுக்கு போகாது . 2 ஆண்டு பணி முடித்தாலே அனைத்துGDS தோழர்களும் கலந்து கொள்ளலாம் என்று மாற்ற வேண்டும்.எவ்வளவோ ஆர்டர்ஸ் மாற்றி கொண்டே இருக்கிறார்கள்.?இதற்கு ஏன் 7வது ஊதிய கமிசன் வரை காத்திருக்கணும் தோழர்களே.?.

   கம்பியூட்டர் இயக்க வயது வரம்பு தேவையா? 45, 50 வயதில் மற்ற அரசு துறையில் யாரும் கம்ப்யூட்டரில் வேலை செய்வது இல்லையா? +2படித்தவர்களால் மட்டும்தான் கம்பியூட்டரை இயக்க முடியுமாமற்றவர்கள் இயக்கினால் ஹேங்க் ஆகிவிடுமாஅல்லது நேரடி தேர்வின் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்கள் அதில் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட் செய்யப்போகிறார்களா?? ஏற்கனவே உள்ள சில கமாண்ட்ஸ் மீண்டும் மீண்டும் இயக்கி வேலை செய்யப்போகிறார்கள்இது GDSஆல் முடியாதா? GDS ஊழியர்களுக்கு ஏற்கனவே SB, RD, RPLI ,RL,SPEED,EMO,SSA போன்ற வேலைகள் தெரியும் என்பதால்,புதிதாய் வருபவர்களை விட எளிதில் கற்றுக்கொண்டு உடனே செய்துவிடுவார்கள்ஏற்கனவே பல H.P.O, S.Oக்களில் GDS ஊழியர்கள் மிக திறமையாகசின்சியராக வேலை செய்து வருகின்றனர்.இந்த துறையில் MTS, POSTMAN, P.A ஆக 100 சதவீத உரிமையுள்ளவர்கள் GDS தான் என்பதை நினைத்து பாருங்கள் தோழர்களே.

   எதிர்வரும் 26-03-2015 அன்றைய கூட்டு போராட்டக்குழு அறிவித்துள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் வெற்றி பெற செய்வோம்.தொழிலாளர்கள் பிரச்சனைகளில் வஞ்சனையால் வம்பர்கள் அம்பெய்தினாலும் பண்பட்ட தொழிலாளர் நலனே நாளை சரித்திரம் படைக்கும் என்பதை உணர்ந்துசற்று தாமதமான முடிவென்றாலும் சரியான முடிவினை எடுத்த NFPE P3,P4,R3,R4,GDS மாநில தலைமையின் அறைகூவலுக்கு  நாம் அனைவரும் ஒன்றுப்பட்ட சக்தியாக களத்தில் நின்று வெற்றியை தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
                                BY, GDS NFPE - KUMBAKONAM

1 comment:

  1. உங்களுடைய கோரிக்கைகளும் உணர்வுகளும் நூற்றுக்கு நூறு உண்மை தோழர். GDS ஊழியர்களுக்காக குரல் கொடுக்கும் உங்களுடன் நானும் ...

    ReplyDelete