Tuesday, March 24, 2015

அஞ்சல் ஊழியர் போர்ப்படை தளபதிகளே! வெகுண்டெழுவீர் !! தோழர்களே!

அஞ்சல் ஊழியர் போர்ப்படை தளபதிகளே!  வெகுண்டெழுவீர் !!
தோழர்களே!

நமது ஒன்பது NFPE சங்கங்களின் சார்பாக 26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு முறையாக அறிவிப்பு கொடுத்து, லேபர் கமிசன் நம்மை அழைத்து 20.3.2015 அன்று பேச்சு வார்த்தை நடத்தியது. அஞ்சல் மாநில நிர்வாகத்திற்கு, 24.03.2015 குள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட கோரி கடிதம் கொடுத்துள்ளது .

ஆனால் நமது அஞ்சல் நிர்வாகம் எதையும் மதிக்காமல் ஏப்ரல் மாதம் தான் 
தொழிற்சங்கங்களுடன் பேசுவோம் என கடிதம் கொடுத்துள்ளது. ஊழியர்களின் உணர்வுகளை மதிக்காத போக்கை கண்டித்தும், பேச்சுவார்த்தைக்கு வராததை கண்டித்தும்,  பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்  25.03.2015 மாலை 4.00 மணியளவில் சென்னை மாநில அஞ்சல் நிர்வாக அலுவலகம் முன்பாக. 


தோழர்களே ஆயிரக்கணக்கான தோழர்கள் அணிதிரண்டு வாரீர்!!
சென்னை தோழர்களே !! அலை கடலென அணிதிரண்டு வாரீர் !!
ஆர்ப்பரித்து வாரீர்!!!


அநீதிகண்டு வெகுண்டெழுவோம் தோழர்காள்!!!
அநீதி களைய புறப்படுவோம் தோழர்காள்!!!
அஞ்சல் ஊழியர்களின் எழுச்சிப்படை....


26.03.2015 வேலைநிறுத்தப்போராட்டம் நோக்கி...
அணிவகுப்போம் தோழர்காள் ..


நெஞ்சினை பிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடோம்!!!

No comments:

Post a Comment