ஆன் லைனில் மட்டுமே ரயில்வே தேர்வு: ரயில்வே அமைச்சகம் முடிவு
ரயில்வே தேர்வுகளை இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ள ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, காகிதங்கள் மூலமாக நடத்தப்படும் தேர்வு முறை தோல்வியடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியாகிவிடும் பிரச்னை இருப்பதாலும், இத்தகைய தேர்வு முறை மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாலும் ஆன் லைன் மூலம் இனி தேர்வுகளை நடத்த வேண்டும் என அமைச்சர் சுரேஷ் பிரபு, அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்
.
.
No comments:
Post a Comment