Thursday, December 18, 2014

வேலைவாய்ப்பை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை
 
பதிவு செய்த நாள் - டிசம்பர் 12, 2014, 6:33:00 AM
மாற்றம் செய்த நாள் - டிசம்பர் 12, 2014, 6:33:00 AM
டந்த 2011, 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வேலை வாய்ப்புப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்கள், அடுத்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ புதுப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. நேரில் செல்ல இயலாதவர்கள் பதிவு அஞ்சல் மூலமாகவும் புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக, www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் புதுப்பித்துக் கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment