Monday, January 13, 2014

WISHING ALL OUR COMRADES A HAPPY AND PROSPEROUS PONGAL !

அனைத்து நல்லிதயங்களுக்கும்,  அமிழ்தினும் இனிய  தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !


 தம்பிராஜ் GDS NFPE கோட்ட செயலாளர். குடந்தைகோட்டம்

ஜெ . இராமமூர்த்தி, மாநிலச் செயலர்.

தமிழகத்தின் அஞ்சல் -RMS   தோழிய / தோழர்களுக்கு  நம் பொங்கல் பரிசு !

1.  பொங்கல் திருநாள் காலத்தில் உத்திரவிடப்பட்ட END  USERS TRAINING  நமது அஞ்சல் மூன்றின் முயற்சியால் ஒத்திவைக்கப் பட்டது . இதனால் கிட்டத்தட்ட 100 தோழிய / தோழர்கள்  குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட ஏதுவாயிற்று !

2. பொங்கல் திருநாளில்  தென் மண்டலத்தில் உத்திர விடப் பட்டிருந்த
துரித அஞ்சல் பட்டுவாடா  ரத்து செய்யப் பட்டது - இது நமது அஞ்சல் -RMS இணைப்புக் குழுவால் அறிவிக்கப் பட்ட போராட்டத்தின் வெற்றியாகும் . இதன்  மூலம்  தென் மண்டலத்தில் சுமார் 3000 ஊழியர்கள்  பொங்கல் திருநாளை கொண்டாடிட ஏதுவாகிறது !

3. பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை அன்று  மதுரை PTC இல்  உத்திரவிடப் பட்டிருந்த MACP  II  TRAINING  மாற்றியமைக்கப் பட்டு  13.01.2014 அன்று  சுமார் 80  தோழிய/ தோழர்களுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டது . இது நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்றின முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். அந்த 80 தோழர்களும்  நமது மாநிலச் சங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் !

4.மூடப் பட்ட மேலூர் தெற்கு  அஞ்சலகம்  மீண்டும் திறக்கப் பட உத்திரவு பெற்றோம் ! இது நமது  தமிழ் மாநில  இணைப்புக் குழு போராட்டத்தின் வெற்றி!

5. பழிவாங்கும  இட மாறுதல் இடப்பட்ட தூத்துக்குடி தோழியர் . துர்காதேவியின்  இட மாற்றல் உத்திரவு  நிறுத்தப் பட்டது . அவர்தம் குடும்பத்துடன்  பொங்கல் திருநாளைக் கொண்டாடிட நம் அன்பு வாழ்த்துக்கள்! 

இது தான்  அஞ்சல் மூன்று  இயக்கம் ! 
இதுதான்  நமது அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கம் ! 
இதுதான்  நமது அஞ்சல் RMS  தமிழ் மாநில இணைப்புக் குழு ! 
இதுதான்  நமது NFPE  பேரியக்கம் !  
இதன் வெற்றி , நம் ஒவ்வொருவரின் வெற்றியாகும் ! 

இந்த வாழ்த்துச் செய்தியை   உங்கள் ஒவ்வொருவரின் வலைத்தளத்தின் மூலம் அனைத்து  இளைய , புதிய தோழர்களுக்கும் கொண்டு செல்லுங்கள் !  

அனைத்து  இளைய தோழர்களையும், தோழியர்களையும்  NFPE   பேரியக்கத்தில் இணையுங்கள் ! 
இதுவே  கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு  நம் மாநிலச் சங்கத்தின் பொங்கல் நற் செய்தியாகும் !

No comments:

Post a Comment