Monday, January 13, 2014

பார்த்ததும் படித்ததும்








எந்த செயலையும் நாளை நாளை என்று நாட்களைக் கடத்தாமல், இன்றே செய்வதால் அது நன்றே முடியும். 


வயதானவர்களின் அறிவு முதிர்ச்சி, நடுவயதுக்காரர்களின் மன உறுதி, இளைஞனின் உற்சாகம், குழந்தையின் இதயம் ஆகியவற்றை அளிக்கும்படி தினமும் இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்

மனிதனின் எண்ணத்தையும் மீறி சிலநேரங்களில் கால சக்தி வேலை செய்வதுண்டு. எனவே, எது நடந்தாலும் அதை ஏற்கும் வகையில், மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் எப்போதும் சமாதானத்தையும், சகிப்புத்தன்மையையுமே நமது லட்சியங்களாக கொள்ள வேண்டும்.. 


கடந்து போன நாட்களும், செயல்களும் மீண்டும் வருவதில்லை. எனவே, கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கூடாது.

தனி இடத்தில் அமர்ந்து உயர்ந்த சிந்தனை மற்றும் அமைதியான சிந்தனையால் அறிவை நிரப்பி தியானம் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

அறிவு தான் அரசன். மனமும், இந்திரியங்களும், உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழ வேண்டும்.

--
மகாகவி  பாரதியார்.-

No comments:

Post a Comment