Tuesday, December 31, 2019
Department of Posts launching new service -- CSC

Thursday, December 19, 2019
Revised cut off date for revival of lapsed PLI/RPLI Policies || Last Date 31.03.2020
*5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலாவதியான PLI/RPLI பாலிசிகளை 31.12.2019க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என PLI இயக்குனரகம் உத்தரவு வெளியிட்டிருந்தது. மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலாவதியான PLI/RPLI பாலிசிகளை புதுப்பிப்பதற்கான கால அளவை 31.03.2020 வரை நீட்டித்து PLI இயக்குனரகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. சில இடங்களில் இதுவரை செலுத்தப்படாமல் நிலுவைத்தொகை மற்றும் அபராத தொகை அதிகமாக இருப்பதன் காரணமாக பொதுமக்கள் தங்களுடைய பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. காலாவதியான PLI/RPLI பாலிசிகளை புதுப்பித்தால் மட்டுமே அதற்கான பலன்களை பெற முடியும் என பொதுமக்களிடம் எடுத்துக் கூறலாம். ஒருவேளை அதிக தொகை காரணமாக புதுப்பிக்க முடியாதவர்களிடம் இனி புதிதாக PLI/RPLI பாலிசிகளை தொடங்குமாறு கேட்டுக்கொள்ளலாம் என இயக்குனரகம் தெரிவித்துள்ளது.*

Wednesday, December 18, 2019
கும்பகோணம் டிவிசனில் MTS seniority list திருச்சி R.Oவில் நேற்று முன்தினம் அப்ரூவல் ஆகி வந்தது. விரைவில் ஆர்டர் ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள்.
இன்றைக்கு அருமை தோழர் அண்ணன் கல்லூர் ராஜ்குமார்அவர்கள் MTSஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.அவருக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
நாளைக்கும் சிலருக்கு கிடைக்கலாம். மொத்தமாக 4 அல்லது 5 இடங்கள் வரும். UR- 2 or 3 ,OBC-1,SC/ST-1 நிச்சயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
Friday, December 13, 2019
Friday, December 6, 2019
கமலேஷ்சந்திரா கமிட்டிக்கு பிறகு ABPM/Daksevaks என்று மாற்றப்பட்டிருந்தாலும் யார் தங்களது சொந்த சைக்கிளில் மெயில் எடுத்து செல்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே சைக்கிள் அலவன்ஸ் தரப்பட வேண்டும் என டைரக்ரேட் தெரிவித்துள்ளது
GDS :: Grant of Cycle Maintenance Allowance (CMA) after rationalisation of categories of GDS on implementation of GDS Committee Report ... Clarification
Posted by pp rav
Tuesday, December 3, 2019
*தமிழக அஞ்சல் துறையில் விளையாட்டு பிரிவில் எழுத்து தேர்வின்றி பணி நியமனம்:-*
*தமிழக அஞ்சல் துறை மூலம் விளையாட்டு பிரிவில் அஞ்சல் உதவியாளர்(PA) RMS பிரிப்பக உதவியாளர்(SA) தபால்காரர்(POSTMAN ) பன்முகத் திறன் ஊழியர்(MTS) ஆகிய பதவிகளுக்கு பணி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.*
*இதில் எந்தவிதமான எழுத்துத்தேர்வும் கிடையாது.*
*இந்த நியமனங்கள் 08.04.1986 DOPT வழிகாட்டு நெறிமுறை உத்தரவின் அடிப்படையில் நடைபெறும்.*
*சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்படும்.*
*மாநிலங்கள் /யூனியன் பிரதேச அளவிலான தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அதற்கு அடுத்து இரண்டாவது முன்னுரிமை வழங்கப்படும்.*
*பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வைத்திருப்பவர்களுக்கு மூன்றாவது முன்னுரிமை வழங்கப்படும்.*
*பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நான்காவது முன்னுரிமை வழங்கப்படும்.*
*இந்தப் பணி நியமன 43 வகையான விளையாட்டுப் போட்டிகளில் வழங்கப்படும்.*
*சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் Form 1,
தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்Form 2, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்
Form3,தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் Form4 ஆகிய சான்றிதழ்கள் வரையறுக்கப்பட்ட அமைப்பில் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் செயலர்களால் வரையறுக்கப்பட்ட அமைப்பில் அளிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.*
*அஞ்சல் உதவியாளர்(PA) RMS பிரிப்பக உதவியாளர்(SA) தபால்காரர்(POSTMAN ) நியமனத்திற்கு விண்ணப்பிப்போர் 31.12.2019 தேதியன்று18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகளும் மற்ற பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.*
*பன்முகத்திறன் ஊழியர்,(MTS ) பதவிக்கு விண்ணப்பிப்போர் 31.12.2019 அன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 10 ஆண்டுகளும் மற்ற பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.*
*தற்போது அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் பன்முகத்திறன் ஊழியர் ( MTS)பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு 35 வயது வரையிலும் ,அஞ்சல் உதவியாளர்(PA) RMS பிரிப்பக உதவியாளர்(SA) தபால்காரர்(POSTMAN ) பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு 40 வயது வரை வரையிலும் இருக்கலாம்.*
*அஞ்சல் உதவியாளர்(PA) RMS பிரிப்பக உதவியாளர்(SA) தபால்காரர்(POSTMAN ) தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 10+ 2 அல்லது பன்னிரண்டாம் வகுப்பு ,அதற்கிணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும் . அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் .அந்த சான்றிதழ் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கணினி தேர்வு மையங்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும் . 12ஆம் வகுப்பில் அல்லது அதற்கு மேல் வகுப்புகளில் அடிப்படை கணினி பாடத்தை ஒரு பாடமாக எடுத்து படித்து இருந்தால் மேற்கண்ட சான்றிதழ் அளிக்க தேவையில்லை.*
*தபால்காரர் பதவிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் . தமிழில் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.*
*அந்த சான்றிதழ் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கணினி தேர்வு மையங்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.* *12ஆம் வகுப்பில் அல்லது அதற்கு மேல் வகுப்புகளில் அடிப்படை கணினி பாடத்தை ஒரு பாடமாக எடுத்து படித்து இருந்தால் மேற்கண்ட சான்றிதழ் அளிக்க தேவையில்லை. தபால்காரர் பதவிக்கு விண்ணப்பிப்போர் இருசக்கர வாகன அல்லது இலகுரக வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும்.* *மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வாகன உரிமம் வைத்திருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.*
*பன்முகத்திறன் ஊழியர்( MTS) பதவிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு வரை தமிழில் படித்திருக்க வேண்டும்.*
*அஞ்சல் உதவியாளர்(PA) RMS பிரிப்பக உதவியாளர்(SA) பதவிகளில் 89 காலி இடங்களும்,தபால்காரர்(POSTMAN )பதவிகளில் 65 காலி இடங்களும் பன்முகதிறன் ஊழியர்(MTS) பதவிகளில் 77 காலி இடங்களும், அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட காலியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை .காலியிடங்களின் பட்டியல் நியமனம் அறிவிக்கையுடன் பிற்சேர்க்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது.*
*அஞ்சல் உதவியாளர்(PA) RMS பிரிப்பக உதவியாளர்(SA) பதவிக்கு ரூ.25,500/-அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும் . தபால்காரர்(postman ) பதவிக்கு ரூ.21,700/-அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும் .பன்முகத்திறன் ஊழியருக்கு(MTS ) ரூ.18,000/-அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் இந்த விண்ணப்பத்தினை www.indiapost.gov.in or www.tamilnadupost.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*
*விண்ணப்பக் கட்டணம் ரூ 100 ரூபாய் ஆகும். கணினிமயமாக்கப்பட்ட எல்லா அஞ்சலகங்கங்களிலும் இந்த விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை விண்ணப்பத்தில் ஒட்டப்பட வேண்டும்.*
*விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 28.12.19 ஆகும்.*
*விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 31. 12.19 ஆகும்.*
*விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் பொழுது விண்ணப்பதாரர்கள் கவனமாக தங்கள் பெயர், தந்தையார் பெயர், விண்ணப்பிக்கும் பதவி ஆகியவற்றை விண்ணப்ப கட்டணத்திற்கான ரசீதில் தவறில்லாமல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.*
*எக்காரணத்தைக் கொண்டும் விண்ணப்பக் கட்டணம் திருப்பி தரப்படமாட்டாது. அஞ்சல் உதவியாளர் /பிரிப்பக உதவியாளர் அல்லது தபால்காரர் அல்லது பன்முகத் திறன் ஊழியர் பதவி எந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறோம் என்பதை விண்ணப்பத்தில் குறிக்க வேண்டும்.*
*விண்ணப்பத்தினை பதிவு தபாலிலோ விரைவு தபாலிலோ அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் மேல் Application for Sports Quota Recruitment 2019, Tamilnadu Circle என்று எழுதியிருக்க வேண்டும்.*
*விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் கையெழுத்திடாமல் இருந்தாலோ, புகைப்படம் ஒட்டாமல் இருந்தாலோ ,சான்றிதழ்களின் நகல்கள் இல்லாமல் இருந்தாலோ, விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாளுக்கு பிறகு வந்த சேர்ந்தாலோ அவைகள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.*
*தோழமையுடன்,*
*உங்கள் நண்பன் விஜய்.*
*உங்கள் நண்பன் விஜய்.*
Subscribe to:
Posts (Atom)