Monday, July 29, 2019


GDS தோழர்களே! இலாகா எச்சரிக்கை!
உங்களை strike செய்ய சொல்லும் சங்கங்களில் இருந்து விலகி இருங்கள்.
இலாகா ஆணையின் தமிழாக்கம் கீழே படியுங்கள்!

Gds தோழர்கள் strike-ல் கலந்து கொண்டால் 2007-ம் ஆண்டில் டைரக்ரேட் டால் அறிவிக்கப்பட்ட அவருக்கான தண்டனைகள் Rule -23 of gds conduct and engagement 2011விதியில் சேர்க்க  பிப்ரவரி 11-ந்தேதி போஸ்டல் சர்வீஸ் போர்டின் 3-வது மீட்டிங்கில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான பழைய ஆர்டர்கள் செயல்இழக்கின்றன. இனி கீழ்க்கண்ட நடத்தை விதிகளை செயல்படுத்த அனுமதியளிக்கப்படுகிறது.

1. Gds ஊழியர்கள் strike-ல் கலந்து கொள்ளும் நாட்களுக்கானTRCA மட்டும் தராமல் இருந்தால் போதாது,strike-ஐ தூண்டினாலோ, வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது நாசவேலை செய்ய திட்டமிட்டாலோ நிர்வாகரீதியாக அவரது சர்வீஸ் ரத்து போன்ற தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். 

இது குறித்து Rule -23 of gds conduct and engagement 2011விதியில் அறிவிக்கப்பட்ட அவருக்கான தண்டனை வழிமுறைகள் போதுமான அளவு குறிப்பிடப்படவில்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் ஏற்கனவே உள்ள சர்வீஸ் ரத்து நடைமுறைகள் பயன்பாட்டு வருகிறது.

2.Gds  strike-ல் கலந்து கொள்ளும் நாட்களுக்கானTRCA மட்டும் தராமல் இருந்தால் போதாது, மாறாக,போனஸ், DA,paid leave TRCA உள்ளிட்டவைகள் குறைக்கப்படும்.

3.Gds  strike-ல் கலந்து கொண்ட நாட்கள் paid leaveஆகவோ அல்லது வேறு வகையிலோ ரத்து செய்யப்படமாட்டாது.

4.Gds  strike-ல் கலந்து கொண்ட நாட்கள்  குறித்து நிர்வாக அதிகாரி நோட்டீஸ் அனுப்பி strike-ஐ தூண்டியது, வன்முறையில் ஈடுபட்டது அல்லது நாசவேலை செய்ய திட்டமிட்டது தொடர்பாக  அவர்களுக்கு சர்வீஸ் ரத்து போன்ற தண்டனைகள் வழங்கலாம். 

5.Gds  strike-ல் கலந்து கொண்ட நாட்கள் பிற்காலத்தில் பணிஓய்வுபெறும்போது வழங்கப்படும் சிவியரன்ஸ் தொகை, கிராஜிவிட்டி தொகைகளில் கழித்து குறைத்து வழங்கப்படும்.

6.Gds  strike-ல் கலந்து கொண்ட நாட்கள் பிற்காலத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் MTSஆக நியமிக்க வேண்டி இருந்தால் அந்த நாட்கள் சர்வீஸ் கணக்கில் சேர்க்கப்படாது

7.Gds  strike-ல் கலந்து கொண்ட நாட்கள் பிற்காலத்தில்  MTS, postman மற்றும் PA தேர்வு எழுத போகும்போது் அந்த நாட்கள் சர்வீஸ் கணக்கில் சேர்க்கப்படாது

மேற்கூறிய தண்டனைகள் பாரபட்சமின்றி நடைமுறைத்தப்பட வேண்டும்.இந்த நடைமுறைகள் 8-5-19 முதல் அமுலுக்கு வருகிறது

Treatment of strike period in respect of Gramin Dak Sevaks ......






No comments:

Post a Comment