Tuesday, July 31, 2018

 


 வரப்போகிற    கமிட்டி பரிந்துரைகள் சில...

1. கமலேஷ் சந்திரா கமிட்டி அமுலாக்கத்திற்கு பிறகு 
லீவு பொறுத்தவரை இனி லீவு எடுக்காத நாட்களில் அதிகபட்சமாக 180 நாட்கள் பணமாக்கிகொள்ளலாம். கடைசியாக பணிஓய்வு பெறுபவர்களுக்கே இது பொருந்தும். ஆனால்,  இடையில் வேலையை ராஜினாமா செய்தாலோ, அல்லது   பதவி உயர்வு பெற்று சென்றாலோ இந்த வாய்ப்பு இல்லை.

2. மேலும், 5  நாட்கள் அவசரகால விடுப்பு தரப்போகிறார்கள். இதற்கு பதிலி ஆள் டூட்டி பார்க்க முடியாது. கம்பைன்ட் டூட்டிதான். ஒரே நேரத்தில் 2 நாட்களுக்கு தான்  இந்த விடுப்பு எடுக்க முடியும். இதை பணமாக்கி கொள்ள முடியாது. அந்த ஆண்டில் இந்த லீவை எடுக்கவில்லைஎன்றால், அது அடுத்த ஆண்டில் தொடர்ந்து சேர்க்கப்படமாட்டது. 

3. ஓரு ஆண்டுக்கு அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு ரூ. 6000/- கல்வி உதவித்தொகை தரப்படும்.

4. ESI போன்ற மருத்துவ வசதிகள்  பரீசிலித்து அளிக்கப்படலாம்.

5. பென்சனை பொறுத்தவரை  8 ஆண்டுகள் பணிசெய்திருந்தால் அதில் 5 ஆண்டுகளை சர்வீஸ் என்று எடுத்துகொண்டு,  மொத்த பணிக்காலத்தையும் இந்த விகிதாச்சாரம் அடிப்படையில்  கணக்கிட்டு பென்சன் வழங்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

6. நிர்வாக காரணங்களுக்கு ஒரு ஊழியரை பணிமாற்றம் செய்யலாம். இது உபகோட்ட அதிகாரியே, கோட்ட அதிகாரி அனுமதியோடு செய்யலாம்.

7.கிளை அஞ்சலகங்கள்   வருவாய் அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கப்பட உள்ளன .

 100 சதம் வருவாய் ஈட்டும்  BO -  A பிரிவு பச்சை (GREEN )
75 சதம் முதல் 99.9 வரை               - B  பிரிவு ஆரஞ்சு (ORANGE)
50 சதம் முதல் 47.9 வரை               - C   பிரிவு  இளஞ்சிகப்பு (PINK )
50 சதத்திற்கு கீழ்                             - D     பிரிவு  சிகப்பு   (RED ) 


100 சதத்திற்கு மேல் உள்ள அலுவகத்திற்கு  10%  கூடுதலாக இன்சென்ட்டிவ் வழங்கப்படும் .


B பிரிவில் உள்ளவர்களுக்கு நிர்வாகத்தால் ஊக்குவிக்கப்பட்டு 100 சதத்தை எட்ட உதவுவார்கள்.

 
C பிரிவு ஊழியர்களுக்கு முறையான கடிதம் அனுப்பப்பட்டு கிளை அஞ்சலக அலுவகத்தில் வருவாயை பெருக்கவும்  கூடுதலாக 30 நிமிடம் பணி செய்யவும் பணிக்கப்படுவார்கள்.

 
D பிரிவு அலுவகத்திற்கு RED ALERT நோட்டீஸ் கொடுக்கப்பட்டு கூடுதலாக 60  நிமிடம் பணி செய்யவும் பணிக்கப்படுவார்கள் .தொடர்ந்து வருவாய் ஈட்டுவதில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அந்த அலுவகத்தை இணைக்கவோ /வேறு இடத்தில் மாற்றவோ நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் .


8. வருவாயை பெருக்கும் பொருட்டு, IP, ASP அவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இலக்குகள் நிர்ணயிக்கப்படும். அதில் எழுத்தர் உதவி தலைவராக செயல்பட்டு, அனைத்து GDS ஊழியர்களையும்  பயன்படுத்தி இலக்குகளை (RPLI, SB, RD, TD, IPPB TARGET, .etc.) அடையவேண்டுமாம்.

No comments:

Post a Comment