Monday, July 2, 2018

தகவல் பெறும் உரிமை சட்டம் -2005...
...எந்தெந்த பிரிவுகளில் தகவல்கள் பெறலாம்...
..
சட்டப்பிரிவு ..6(1),...7(1)....2(ஒ)(1)...
தகவல் தர கால
அவகாசம்..
6(1)...30 நாட்கள் கால அவகாசம்...
..
7(1)...48 மணி நேரம் கால அவகாசம் ...
..
2(ஒ)(1)...அடுத்த நொடியே தகவல் பெறலாம்...
...சட்டப்பிரிவு 2(ஒ)(1)....தகவல்களை ஆய்வு செய்யலாம்..,
.....ஆய்வு செய்து..அந்த நோடியே உங்களுக்கு தேவையான தகவல்களை பெறலாம்...
..
..
தகவல் சட்ட ஆர்வலர்களே ..!..தகவல் சட்டம் பயன்படுத்தும் மக்களே..!
...
அனைத்து தகவல்களும் ....
த.பெ.உ.ச -2005 சட்டப்பிரிவு 6(1)-இன் கீழ் மட்டும் கேட்காதீர்கள்
....
அவசரமாக ஒரு தகவல் வேண்டும் என்றால் ,.
...
..தகவல் பெரும் உரிமை சட்டம் 2005 சட்டப்பிரிவு 2(ஒ) (1) வை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான தகவல்கள் உள்ள அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலருக்கு ,.
பதில் தபால் ஒப்புகை அட்டை இணைத்து அல்லது நேரில் கொடுத்து தகவல்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ..,
நேரில் கொடுப்பது உசிதமானது ..,அதுவே கால விரையம் ஏற்படாமல் தவிர்க்கும் ..,
...
ஆகையால் ,அனைவரும்..தாங்கள் கோரும் தகவல்கள் பொருத்து ...தகவல் சட்ட பிரிவுகளை பயன்படுத்துங்கள் ...,.
..
..ஒரு தகவல் எந்த நோக்கத்திற்கு பெறுகிறோம் என்று சிந்தித்து ,அதற்கு தகுந்த சட்டபிரிவை பயன்படுத்துங்கள் .,
...
சில அவசரநிலை என்றால் ,ஆய்வு பிரிவை பயன்படுத்துங்கள் ,.
..
தகவல்கள் விரைவில் பெறலாம் ,நீங்களே நேரில் அலசலாம் ..
...
இந்த பிரிவில் உள்ள ஒரு முக்கியம் விடையம் என்னவென்றால் ,.
..
நீங்கள் தகவல் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1) இன் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பம் அனுப்பினால்,.
அவர்கள் 30 நாட்களுக்குள் பதில் தர வேண்டும்..
..இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ,.நீங்கள் அவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது ..,
..
ஆதலால் ,அவர்கள் அந்த 30 நாட்களில் நீங்கள் கேட்ட தகவல்களில் உள்ள ஊழல்களை மறைக்க / அழிக்க வாய்ப்புள்ளது ..,
...
ஆதலால் ,தகவல் பெரும் உரிமை சட்டம் 2005 சட்டப்பிரிவு 2(ஒ)(1) வை அதிகமாக பயன்படுத்துங்கள் ..,
இந்த விண்ணப்பம் நேரில் அளிப்பது தான் நல்லது / நன்று கூட..,
உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் எந்த பிரிவை பயன்படுத்த வேண்டும் ..சட்டப்பிரிவு...7(1)....
எந்த சூழ்நிலையிலாவது உங்கள் வாழ்வாதாரம் பாதித்தில் அப்பொழுது அதனை எதிர்கொள்ள உங்களுக்கு தேவையான தகவல்களை சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்தில் பெறலாம்

No comments:

Post a Comment