RECRUITMENT RULES DRAFT
உதாரணமாக .
1.நேரடியாக வரும் வெளியாருக்கு வயது வரம்பு , அப்ளிகேசன் அனுப்பும் கடைசி நாள் வரை கணக்கிடும் போது , GDSக்கு மட்டும் ஜனவரி 1 என்று சொல்வது அநீதி இல்லையா ?டிபார்ட்மென்ட் ஊழியர்கள் பதவியுயர்வு பெறுவதற்கு தானே இதை கணக்கில் கொள்கிறார்கள். இதை எப்படி GDSக்கு மட்டும் அப் ளை செய்கிறார்கள் ? அப்படியென்றால் டிபார்ட்மென்ட் ஊழியர்களின் பதவியுயர்வாக இதை கருத வேண்டியது தானே .
2. நேரடியாக வரும் வெளியார்கள் வேகண்ட் இல்லாத டிவிசனை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்வு எழுத அனுமதித்து வேறு டிவிசனிலில் அவர்களை தேர்ந்து எடுக்கலாம். ஆனால் GDSக்கு மட்டும் அந்த டிவிசனில் வேகண்ட் இல்லையென்றால் தேர்வு எழுத முடியாது என்பது அநீதி . மேலும் ,வேறு டிவிசனில் காலியிடம் இருந்தாலும் SURPLUS ஆக உள்ளவர்களை வைத்து நிரப்ப முடியாது என்பது GDSக்கு மட்டும் இழைக்கப்படும் அநீதி .
3. நேரடியாக தேர்வு எழுத வரும் வெளியார்கள் , MTS, POSTMAN, PA தேர்வுகளை உடனே எழுதி விடுகின்றனர் . ஆனால் GDS மட்டும் ஐந்து ஆண்டுகள் சர்வீஸ் முடித்தபின் தான், POSTMAN, PA எழுத வேண்டும் என்பது அநீதி இல்லையா ? GDS கமிட்டியே MTS, POSTMAN தேர்வு எழுத சர்வீஸ் தேவையில்லை என்று கூறியுள்ள நிலையில் பழைய படியே GDS பதவியுயர்வினை தடுக்கும் வகையில் ஐந்து ஆண்டுகள் சர்வீஸ் முடிக்க கூறுவது அநீதி இல்லையா ?
4. ஒவ்வொரு வருசமும் இந்த இலாக்காவுக்காக வருமானத்தை அதிகரிக்க வேண்டி ,கையில் உள்ள பணத்தை போட்டு கூட SB, RD, TD, RPLI, E-POST ,GOLD BOND, FIRE CRAKERS, எல்லாம் பிடித்து கொடுத்து உழைத்து வரும் GDS ஊழியர்களுக்கு பதவியுயர்வில் சலுகைகள் வழங்காமல் மறுப்பது நியாயமா ? POSTMAN தேர்வு எழுத +2 படித்து இருக்க வேண்டும் , PA தேர்வு எழுத DEGREE படித்து இருக்க வேண்டும் என்பது தற்போது பணியாற்றும் பல GDS ஊழியர்களுக்கு பாதகமானது இல்லையா ? தேர்வில் ,அவர்களுக்கு தனியாக 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டாமா ?
GDS ஊழியர்கள் தனித்துவ மான வர்கள் என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியுள்ள நிலையில் அவர்களை நேரடியாக தேர்வு எழுத வரும் வெளியார்க ளாக கருதுவது GDS பதவியுயர்வினை தடுக்காதா ?
அதேநேரத்தில் , புதிதாக ஒரு சில தேர்வு முறைகள் கூறியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.
No comments:
Post a Comment