Sunday, June 25, 2017

NFPE 
அனைத்து GDS ஊழியர்களும் AIPEU GDS சங்கத்தில் உறுப்பினர் என பெருமைகொள்வோம்   

அன்புத் தோழர்களே தோழியர்களே வணக்கம்.

     அகில இந்திய அளவில் நமது இலாக்காவில் GDS ஊழியர்கள்  2,65,000 க்கு மேல் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மத்தியில் ஆளும் அரசு நமது ஊதியக்குழு அறிக்கையை கடந்த 24.11.2016 அன்று பெற்றுக்கொண்டு இன்று வரை அப்படியே கிடப்பில் போட்டுள்ளது. NFPE சம்மேளனம் பல கடிதங்கள் நமது அரசு மற்றும் இலாக்காவிற்கு  கொடுத்தும் 6 பேர் கொண்ட கமிட்டியை போட்டு அவர்கள் அறிக்கையை JS /FA என்று சொல்லக்கூடிய நமது இலாக்கா அலுவலகத்தில் உள்ள பிரிவில் அப்படியே கிடக்கிறது.  இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசு மகாசம்மேளனம் மற்றும் NFPE சம்மேளனம் தனது கோரிக்கையுடன்   வைக்கப்பட்டு இயக்கங்கள் அறிவித்தும் நடத்தியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டும் இலாக்காவை கண்டித்து, உடனடியாக GDS ஊதியக்குழு அறிக்கையை அமல்படுத்து மற்றும் உறுப்பினர் சரிபார்ப்பை அறிவித்திடு உள்ளிட்ட கோரிக்கைகளை அறிவித்து  நமது AIPEU GDS சங்கம்டெ ல்லியில்  இலாக்கா அமைச்சர் அலுவகம் முன்பாக வரும் 27.07.2017 அன்று முழுநேர தர்ணா செய்வதாக அறிவித்துள்ளது.

         அத்தோடு இல்லாமல் நமது NFPE சம்மேளனம் நமது இரு கோரிக்கைள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை அறிவித்து  4 கட்ட இயக்கம் அறிவித்து கடந்த 20.06.2017 ல்  கோட்டமட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டாம் கட்ட போராட்டமாக 12.07.2017 மாநில அளவில் தர்ணா 3ம் கட்டமாக 26.07.2017 டெல்லி டாக் பவன் (DAK BHAVAN )  முன்பாக தர்ணா 4ம் கட்ட இயக்கமாக 23.08.2017 ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என அறிவித்து இயக்கங்கள் நடத்தி வருகிறது. ஆகவே அனைத்து ஊழியர்களையும் உள்ளடக்கிய மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும்  நமது இலாக்கா அஞ்சல் 3, அஞ்சல் 4, RMS 3, 4, AUDIT &,ACCOUNTS, SBCO ,Administration , Casual labour  உள்ளிட்ட நமது NFPE சம்மேளனத்துடன் இணைத்து போராடி வருகிறோம். ஆகவே தனி சங்கமாக GDS போராடி பெறுவது என்பது இயலாத காரியம் . 

நமது போராட்ட இயக்கங்கள் காரணமாக அரசு நமது 2 கோரிக்கையில் ஒன்றான  உறுப்பினர் சரிபார்ப்பு இன்று  அறிவித்துள்ளது. நிச்சயம் நமது முக்கிய கோரிக்கையான ஊதியக்குழு பரிந்துரை அறிவிப்பு நமது 2ம் கட்ட போராட்டத்திற்கு முன்பு அறிவிக்கப்படலாம். இல்லை இல்லை அறிவிக்க வைப்போம்.

இந்த நேரத்தில் அனைத்து GDS ஊழியர்களும் NFPE ன் உருப்புச் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து ஒன்று பட்ட ஊழியர்களின் கோரிக்கையை வென்றிட ALL INDIA POSTAL EMPLOYEES UNION - GDS  என்று சரியாக எழுதி NFPE சங்கத்தில் மட்டும் உறுப்பினர் ஆக சேர்ந்திடுமாறு மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது .

கோட்ட கிளை செயலாளர்கள் அஞ்சல் 3,அஞ்சல் 4 உள்ளிட்ட NFPE சம்மேளன உறுப்பு சங்கங்களின் பொறுப்பாளர்  மற்றும் முன்னணி தோழர்களுடன் இணைந்து செயல்பட்டு தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்திடுமாறு மாநிலச் சங்கம்  கேட்டுக்கொள்கிறது. 

No comments:

Post a Comment