Saturday, February 20, 2016

எல்இடி பல்பு வழியாக இணைய வசதி

வை-பை இணைப்பை விட 100 மடங்கு வேகமானது: எல்இடி பல்பு வழியாக இணைய வசதி

பொதுவாக எல்இடி பல்புகள் வெளிச்சத்தை தரக்கூடியது என்று தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் மூலம் இணைய பயன்பாட்டையும் பெற முடியும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இணைய தளத்தில் வயர் இணைப்பு இல்லாமல் பயன் படுத்துவதற்காக ‘வை பை’ என்ற தொழில் நுட்பம் உள்ளது. இதை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை வயர் இணைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர், செல் போன், லேப் டாப், லேப்லெட் போன்ற சாதனங்களில் இணைய தள வசதிகளை பெற முடியும். தற்போது வை பையை விட 100 மடங்கு சக்தி கொண்ட தொழில்நுட்பத்தில் லை-பை என்ற தொழில்நுட்பம் வந்துள்ளது. அதாவது ஒளி அலைகளை பயன்படுத்தி இணையதள வசதியை பெற முடியும்.

எடின்பெர்க் பல்கலைக்கழகத் தின் பேராசிரியர் ஹாரல்டு, 2011-ம் ஆண்டு லை-பை என்ற புதிய பதத்தை அறிமுகப் படுத்தினார்.

விப்ரோ எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி வளாகத்தில் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தார். எல்இடி பல்ப் வெளிச்சத்தின் மூலமாக இணையத் தொடர்பை பெற்று வீடியோவை பார்க்கும் செயல்பாட்டை அனைவருக்கும் விவரித்தார்.

லை-பை தொழில்நுட்பம் புதிய வாய்ப்புக்களை உருவாக்கும். 2022-ம் ஆண்டிற்குள் இந்த துறை 11,300 கோடி டாலர் அளவிற்கு விரிவடையும் என்று பேராசிரியர் ஹாரல்டு தெரிவித்தார்.
கம்பியில்லா தொழில் நுட்பத் தில் உள்ள ரேடியோ அலை கற்றைகளை விட கண்ணுக்கு தெரிகிற ஒளி அலைக்கற்றை களின் சக்தி அதிகம்.

இதனால் வை-பை என்றுச் சொல்லக்கூடிய கம்பியில்லா இணைப்பை விட லை-பை தொழில்நுட்பம் மூலம் வேகமாக நாம் தகவல்களை பதிவிறக்கம் செய்யமுடியும்.
மேலும் வை-பை தொழில் நுட்பத்தில் முக்கியமான பிரச் சினையான நெட்வொர்க் தொந் தரவுகள் இந்த தொழில்நுட்பத்தில் இருக்காது.

No comments:

Post a Comment