பொதுச் செயலருடன் CPMG இடம் நேர்காணல்
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! கீழே காணும் ஏழு கடிதங்களும் நம்முடைய CPMG அவர்களிடம் கடந்த 24.09.2014 JCA தார்ணா நடைபெற்ற தினத்தன்றே அளிக்கப்பட்டு விவாதிக்கப் பட்டுள்ளன.
JCA தார்ணாவுக்கு வருகை புரிந்த நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலாளர் தோழர். N . சுப்ரமணியன் அவர்களுடன் நம்முடைய மாநிலச் செயலர் தோழர். J .R ., GDS மாநிலச் செயலர் தோழர். R . தன்ராஜ், அஞ்சல் மூன்று மாநில தலைவர் தோழர். J .ஸ்ரீ வெங்கடேஷ், மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி, ராமநாதபுரம் அஞ்சல் மூன்றின் செயலர் தோழர். ஜனார்தனம் ஆகியோர் இந்த INFORMAL MEETING இல் கலந்து கொண்டோம். விவாதிக்கப் பட்ட விபரங்கள் :-
1. HSG I REVISED RECRUITMENT RULES அடிப்படையில் அனைத்து HSG I
அலுவலகங்களும் GENERAL LINE OFFICIALS கொண்டு பதவி உயர்வு
அளிக்க வேண்டும் என்ற பிரச்சினையில் DTE க்கு கடிதம் எழுதியுள்ள
தாகவும் விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
CPMG தெரிவித்தார்.
2. தென் மண்டலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பழிவாங்கப்
படும் பிரச்சினையில் ஏற்கனவே அளித்த உறுதி மொழியின் பேரில்
தானே நேரில் பேசி தீர்த்து வைப்பதாக CPMG உறுதி அளித்தார்.
3. ராமநாதபுரம் கோட்டச் செயலர் மாற்றப்பட்ட பிரச்சினையில், உடன்
தலையிட்டு தீர்த்து வைப்பதாக CPMG உறுதி அளித்தார். (தற்போது
இது குறித்து REVISED REPRESENTATION பெறப்பட்டு DPS , SR தலைமை
யிலான TRANSFER COMMITTEE யின் ஒப்புதலுடன் PMG, SR க்கு கோப்பு
அனுப்பப் பட்டுள்ளதாக தென் மண்டல DPS அவர்கள் நம் மாநிலச்
செயலரிடம் தெரிவித்தார்கள் .)
4. இலாக்கா உத்திரவுக்கு எதிராக கண்மூடித்தனமாக GDS SV மற்றும் DSV
பதவிகள் REDEPLOY செய்யப்படுவது தவறு என்பதை சுட்டிக்காட்டி
னோம். மேலும் மதுரை, சேலம், ஈரோடு பகுதிகளில் இலாக்கா உத்திர
வின் படி உரிய அளவைத் தாண்டியே STAMP விற்பனை இருந்த
போதிலும் இப்படி REDEPLOY செய்வது தவறு என்பதை சுட்டிக் காட்டி
னோம். இது குறித்து REPORT பெறப்பட்டு அதனடிப்படையில் பரிசீலனை
செய்யப்படும் என்று CPMG உறுதி அளித்தார்.
5. GDS BPM INITIAL FIXATION OF TRCA விஷயத்தில் , நியாயமான
பிரச்சினை இது என்றும் , பிரச்சினையை தீர்த்திட உடன் ஆவன
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
6. இதர இரண்டு பிரச்சினைகளின் மீதும் தற்போது மேல் நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது .விரைவில் உரிய உத்திரவை எதிர்
பார்க்கலாம் .
அத்துணை பிரச்சினைகளையும் பொறுமையாக கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளித்த நம்முடைய CPMG அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியைப் பதிவு செய்கிறோம் !
தொடர்ச்சியாக நிறைய செய்திகள்(128) , மற்றும் புகைப்படங்கள் கடந்த மாதத்தில் அளித்ததால் , இவை அனைத்தையும் கடந்த வாரத்தில் வெளியிட முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment