நமது பக்கத்து டிவிசனில் இருக்கும் மயிலாடுதுறை தோழர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.
BY,
PERUMAL, P3 DIVISIONAL SECRETARY &CONVENOR OF NFPE FEDERATION. KUMBAKONAM, & P4, NFPE GDS.
என்று பல விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்ள இந்த வலைத்தளம் ஒரு இனிய வாய்ப்பு ! நமது கோட்டச் சங்கம் புதிய தேர்தலுக்குப் பிறகு CPMG அவர்களின் அங்கீகாரம் பெற்று ,
என்று தன் செயல்பாடுகளை சரியான திசையில் துவங்கியிருக்கிறது .
BY,
PERUMAL, P3 DIVISIONAL SECRETARY &CONVENOR OF NFPE FEDERATION. KUMBAKONAM, & P4, NFPE GDS.
A NEW WEB SITE FOR MAYILADUTURAI DIVISIONAL UNION
அன்புத் தோழர்களுக்கு , இனிய வணக்கம் !
இன்று 30-9-14 நம் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவு மயிலாடுதுறை கோட்டக் கிளைக்கென ஒரு புதிய வலைத்தளம் துவங்கப் பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிதாக இளைஞர்கள் பொறுப்பேற்ற பிறகு இது ஒரு புதிய முயற்சி.
நம் இலாக்கா குறித்த செய்திகள்
நம் சம்மேளனத்தின் நடவடிக்கைகள்
நம் மற்றும் GDS அகில இந்திய சங்கத்தின் செய்திகள்
நம் மற்றும் GDS மாநிலச் சங்கத்தின் செய்திகள்
நம் கோட்டச் சங்கச் செய்திகள்
மற்றும் இலாக்கா சட்ட விதிகள் குறித்து அவ்வப்போது அலசல்கள்
என்று பல விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்ள இந்த வலைத்தளம் ஒரு இனிய வாய்ப்பு ! நமது கோட்டச் சங்கம் புதிய தேர்தலுக்குப் பிறகு CPMG அவர்களின் அங்கீகாரம் பெற்று ,
சில நாட்களிலேயே மாதாந்திரப் பேட்டி ,
செயற்குழுக் கூட்டம் ,
நான்கு சுற்றறிக்கைகள் வெளியீடு
அடுத்து , எதிர்வரும் 12.10.2014 அன்று நமது சம்மேளனத்தின் வைரவிழா கருத்தரங்கு நிகழ்ச்சியினை நம் மயிலாடுதுறை நகரில் நடத்திட நாம் திட்டமிட்டுள்ளோம்.
இதில் , கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மிகப் பெரும் தொழிற் சங்கத் தலைவர்கள் மயிலாடுதுறை மண்ணில் , நம் NFPE அரங்கில் கால் பதிக்க உள்ளார்கள்.
நம் அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS , இந்நாள் பொதுச் செயலர் தோழர். N .S ., நம் மண்ணின் மைந்தர் தமிழ்மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர். J .R ., NFPE GDS சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் என்று பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு , பல்வேறு தலைப்புகளில் கருத்தாய்வு செய்திட உள்ளார்கள்.
என்ன தோழர்களே ! நல்ல தொடக்கம் தானே ?
தொடங்குவோம் ! தொடருவோம் !
இளைஞர்கள் மத்தியில்
ஒரு புதிய எழுச்சியை உருவாக்குவோம் !
கரம் நீட்டுங்கள் ! காத்து நிற்கிறோம்!
என்றும் தோழமையுடன்
P . இரவிச்சந்திரன் K . துரை K . வெங்கடேஷ்
தலைவர் கோட்டச் செயலர் நிதிச் செயலர்
No comments:
Post a Comment