SUCCESS TO CIRCLE UNION EFFORTS ON LONG PENDING ISSUES OF CCR
நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முயற்சியால் சென்னை பெருநகரமண்ட லத்தில் நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த சில ஊழியர் பிரச்சினைகள் தீர்க்கப் பட்டன .
இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியில் எடுக்கப் பட்டதன் விளைவாக கீழே கண்ட பிரச்சினை தீர்க்கப் பட்டது .
1. ராணிபேட்டை அஞ்சலக குடியிருப்பு பிரச்சினையில் தோழியர் அம்சாபாய் அவர்களுக்கு ஏற்கனவே வீட்டு வாடகைப் படி வழங்கப்பட்டதை AUDIT உத்திரவின்படி பிடிக்கப் பட்டது . தற்போது இது ரத்து செய்யப் பட்டு SUSPENSION OF QUARTERS க்கு உத்திரவிடப்பட்டு , பிடிக்கப்பட்ட தொகையான சுமார் ரூ. 35000/- திரும்ப அளிக்க உத்திரவிடப்பட்டது.
2. இது போல அதன் கிளைத்தலைவர் தோழர். G . மணி அவர்களுக்கும் இதுபோல SUSPENSION OF QUARTERS உத்திரவிடப்பட்டு வீட்டு வாடகைப் படி பிடித்தம் செய்ய உத்திரவிடப்பட்டது ரத்து செய்யப்பட்டது. இந்த உத்திரவினை இட்ட PMG , CCR அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது போல , பல ஆண்டுகளாக வழங்கப் படாமல் இருந்த உயர் வீட்டு வாடகைப்படி தென் சென்னை//தாம்பரம் கோட்டத்தில் கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு நிலுவைத் தொகையுடன் வழங்கிட உத்திரவு இடப்பட்டுள்ளது. ( 09.11.2010 முதல் வழங்கப்படும்- கீழே பார்க்க உத்திரவு நகலை )
தென் சென்னை :-
1. சோளிங்கநல்லூர் 2. பாலவாக்கம் 3. காரப்பாக்கம் 4. ஒக்கியம் துரைபாக்கம் 5. ஈஞ்சம்பாக்கம்
தாம்பரம் :- 1. பள்ளிக்கரணை
தாம்பரம் :- 1. பள்ளிக்கரணை
இந்தப் பிரச்சினை நம் மாநிலச் சங்கத்தால் ITEM NO . 31 இன் படி RJCM இல் பிரச்சினையாக வைக்கப் பட்டு மேல் நடவடிக்கைக்காக CPMG இடம் பதிலும் பெறப்பட்டு, அந்த பதிலின் நகல் ஏற்கனவே நம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment