Wednesday, June 18, 2014

GDS சங்கத்தின் மத்திய மண்டல கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டம்

DIVISIONAL  CONFERENCE OF  NAGAPPATTINAM  DIVISIONAL  UNION

நாகை அஞ்சல் மூன்று கோட்ட சங்கத்தின் கோட்ட மாநாடும்  அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடும்  நாகை தலைமை அஞ்சலகத்தில் கடந்த 15.06.2014 அன்று  சிறப்பாக நடைபெற்றன  . காலை சுமார் 10.30 மணியளவில்  சம்மேளனக் கொடியை  நாகை அஞ்சல் மூன்றின் மூத்த உறுப்பினரும் நாகை தலைமை அஞ்சலகத் தலைவருமான  தோழர் . செல்வராஜ் அவர்கள் ஏற்றிவைக்க மாநாடு இனிதே துவங்கியது. 


அஞ்சல் மூன்று  மாநாட்டு நிகழ்வுகளுக்கு கோட்ட தலைவர்  தோழர்  
T. சங்கரவடிவேலு அவர்கள் தலைமை ஏற்க  , கோட்டச் செயலர் தோழர் மீனாட்சி சுந்தரம்  வரவேற்புரையாற்றினார்.  மாநாட்டில்  புதிய நிர்வாகிகளாக கீழ்கண்ட தோழர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

தலைவர் :                          தோழர் . T. சங்கரவடிவேலு ,  APM ACCTS. NAGAI HPO
கோட்டச் செயலர்       :  தோழர். S . மீனாட்சி சுந்தரம் , ACCT., D.O. NAGAI .
நிதிச் செயலர் :                 தோழர். S . மாரிமுத்து , SPM, DURGAH SHERIFF .

அஞ்சல் நான்கின் கோட்டச் செயலராக தோழர். P . தசரதன் அவர்கள் மீண்டும் ஏகமனதாகத் தேர்தெடுக்கப் பட்டார். 

புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !


மாநாட்டின் நிகழ்வுகளில்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J.R., அஞ்சல் மூன்றின் மண்டலச் செயலர் தோழர். R . குமார், அஞ்சல் நான்கின் மாநிலத் தலைவர் தோழர். G . கண்ணன்,  அஞ்சல் நான்கின் மண்டலச் செயலர் தோழர்.  S . கோவிந்தராஜன் , AIPEU  GDS  NFPE  சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ்,  மூத்த தலைவர் அஞ்சல் மூன்றின் ஆலோசகர்  தோழர். S . ராஜ்மோகன், முன்னாள் கோட்டச் செயலர்,  மூத்த தோழர். S.கோவிந்தராசு, அஞ்சல் மூன்றின் மாநில உதவி நிதிச் செயலர் தோழர். R . பெருமாள்,  அஞ்சல் மூன்றின் திருவாரூர் கிளைச் செயலர் தோழர். K . ராமலிங்கம் , GDS  கோட்டச் செயலர் தோழர். சட்டநாதன் , GDS  கிளைச் செயலர் தோழர். பிரபாகரன் , அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்டச் செயலர் தோழர். கோபாலகிருஷ்ணன் (AAO ) அஞ்சல் நான்கின் திருவாரூர் கிளைச் செயலர் தோழர்.  பக்கிரிசாமி , முன்னாள் கோட்டத் தலைவர் . தோழர். பாலு ,  மயிலாடுதுறை கோட்டத்தின் தோழர் துரை  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டதும், பொது அரங்கு நிகழ்வில்  இலாக்காவின்  நிலை, ஏழாவது ஊதியக்குழு, CADRE  RESTRUCTURING  உள்ளிட்ட  பிரச்சினைகளை விவாதித்ததும் , சிறப்பாக அமைந்தன.

GDS  சங்கத்தின் மத்திய மண்டல 
கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டம் 

தொடர்ந்து AIPEU  GDS  சங்கத்தின்  மத்திய மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம்  மாநில உதவித் தலைவர் தோழர். இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார் . GDS  சங்கத்தின் 5 கட்ட போராட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஊதியக் குழுவில் GDS  ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. GDS  ஊழியர்களின் தல மட்டப் பிரச்சினைகள் குறித்தும் விவாதம்  அமைந்தது இறுதியாக நாகை கோட்டச் செயலர் தோழர். சட்டநாதன்  நன்றியுரையுடன்  கூட்டம் இரவு எட்டு மணியளவில் இனிதே  முடிவுற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கின் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு  ஆலோசனை வழங்கினர்.

No comments:

Post a Comment