Friday, March 20, 2020

அன்பார்ந்த அஞ்சல் சொந்தங்களே! நமது பாரத பிரதமரின் அறிவியல் பூர்வமான அறிவிப்பை  பின்பற்றி  இந்திய பற்றுள்ள நாம் அனைவரும் வீட்டிலேயே இருந்து கொரானா வைரஸ் பரவும் தொடர்பு வேகத்தை உடைத்தெரிய வேண்டும். 

நம்மையும், நம் அண்டை அயலாரையும் தற்காத்து கொள்ள தடுப்பு நடவடிக்கையாக வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் 12 மணி நேரம் நம்மை  தனிமைப்படுத்தி 10 மணி நேரமே உயிர் வாழும் கொரானா வைரஸின் வீரியத்தை முறியடிக்க ஒன்றுபட்டு உதவுவோம்.

முடிந்தால் அன்றைய தினம் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை வெந்நீரில் உப்பு கலந்து உள்நாக்கில் படும்படி நன்றாக கொப்பளிப்போம். அசைவத்தை மறுத்து சைவமருந்து குழம்பு வைத்து சாப்பிடுவோம். துளசி,இஞ்சி,மிளகு,சீரகம் மஞ்சள் கலந்த ஏதாவது ஒரு சூடான பானங்களை உட்கொள்ள வேண்டுகிறேன். வந்த பின் தவிப்பதை தவிர்க்க வரும் முன் காப்போம்.🙏




Monday, March 9, 2020








பாரதீய அஞ்சல் சங்கம் BPEA சார்பாக மகளிர் தின நல்வாழ்த்துகள தெரிவித்து கொள்கிறேன்!🌈🎊🎄💐💐

Thursday, March 5, 2020

Compassionate ground-ல் 2005 ஆண்டு முதல்   2017 வரையிலான காலகட்டத்தில் நிராகரிக்க ப்பட்ட விண்ணப்பங்களை ஒரு முறை ரிலாக்ஸ் செய்து  மீண்டும் உண்மையான முறையில் பரீசீலித்து GDS குடும்பத்தாற்கு வேலை வழங்க அனைத்து CPMG அவர்களுக்கும் டைரக்ரேட் உத்தரவிட்டுள்ளது.



Wednesday, February 5, 2020


அன்பார்ந்த தேர்வு எழுதும் சகோதர சகோதரிகளே!  உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில்  http://cept.gov.in/exam.html மூலம் சாப்ட்வேரை டவுண்லோடு செய்து  பயிற்சி செய்து வாருங்கள்.
கம்ப்யூட்டர்  திரையில் முதலில் உங்களது Roll number, Name, community போன்றவற்றை சரியாக ஹால்டிக்கெட்டில் இருந்தது போல் அடித்துவிட்டு check box கட்டத்தில் டிக் செய்து  "start test" பட்டனை மவுஸ் மூலம் கிளிக் செய்து  பயிற்சி தேர்வை தொடங்குங்கள்.

திரையானது் இரண்டு பகுதிகளாக  பிரித்து காணப்படும். திரையின் மேலே முதல் பாதியில் நீங்கள் அடிக்க வேண்டிய ஒரு வரி்  மட்டுமே தெரியும். அதை பார்த்து மீதி பாதியில் கீழே தெரியும் திரையின் கட்டத்தில் டைப் அடிக்க வேண்டும்.

ஒரு வரி முடிந்ததும் முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே "Next sentence" ஆப்சன்  திரையில் தெரியும். அப்போது தான் அதை கிளிக் செய்து அடுத்த வரியை அடிக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

*இல்லையென்றால் அதை அடுத்த வரியுடன் சேர்த்து ஒரு  தவறான வார்த்தையாக கம்ப்யூட்டர் எடுத்து கொள்ளும். எனவே அந்த வார்த்தைக்கு அரை மதிப்பெண் குறைக்கப்படும்*

ஒவ்வொரு வார்த்தையின் முதல் 5 வார்த்தைகளை சரியாக அடித்து இருந்தாலே அதை கம்ப்யூட்டர் சரியான வார்த்தையாக எடுத்து கொள்ளும் . எனவே ஒவ்வொரு வார்த்தையின் முதல் 5 எழுத்துக்களை சரியாக அடித்து விடுங்கள்.

ஒரு வரி அடித்த பின் "Next sentence" ஆப்சனை கிளிக் செய்து அடுத்த வரியை பார்த்து அடிக்க வேண்டும். இது போலவே கடைசிவரை  ஒவ்வொரு வரி அடித்து முடித்த பின்பும் மீண்டும் "Next sentence" ஆப்சனை கிளிக் செய்து அடுத்த வரியை அடிக்க வேண்டும்.

அடிக்கும் போது ஏற்படும் தவறுகளை  மவுஸ், ஏரோ கீ, டெலிட் கீ பயன்படுத்தி தவறுகளை சரி செய்யலாம்.  அல்லது இறுதியாக அடித்து முடித்தபின் "review paragraph "ஆப்சனை மவுஸ் மூலம் கிளிக் செய்து  மேலே தெரியும் வாக்கியங்களை பார்த்து தவறுகளை சரி செய்து கொள்ளலாம். இவை அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட 15 நிமிட கால அவகாசத்திற்குள் முடித்து கொள்ள வேண்டும்.

ஆனால் Backspace பயன்படுத்தவே வேண்டாம். தவறுதலாக அதை தொடர்ந்து அழுத்திவிட்டால் அதுவரை அடித்த அனைத்து வார்த்தைகளும் அழிந்து விடும். எனவே கவனமாக இருக்கவும்.  கூடுதலாக இல்லாத வார்த்தைகளை அடித்து இருந்தாலோ அல்லது தவறாக அடித்து இருந்தாலோ மதிப்பெண்கள் குறைக்கப்படாது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், சரியாக அடித்த வார்த்தைகளை மட்டுமே கணக்கில் எடுத்து மதிப்பெண்கள் வழங்குவோம் என்பது ஒவ்வொரு தவறான வார்த்தைக்கும் (0..5) அரை மதிப்பெண்கள் குறைப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சரியாகவே அடியுங்கள்.

இறுதியாக 15 நிமிடங்கள் முடிந்து திரையில் Timer  Zero(0) என்று வரும் வரை பொறுத்து இருங்கள்.நீங்கள் அடித்தது ஆட்டோமெட்டிக்காக Auto submit to SAVEஆகி விடும்.இறுதியாக பிரிண்ட் கொடுத்தபின் உங்களது மதிப்பெண்கள் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.அந்த பிரிண்டிங் தாளில் கையொப்பம் இட வேண்டும். இதை மறவாதீர்கள். 

தேர்வில் 600 கீ அழுத்த வேண்டும் என்பதற்கு ஏற்ப வாக்கியம் அமைக்கப்பட்டிற்கும். பொறுமையாக அடித்தாலே முழுவதுமே அடித்து விடலாம்.ஈசியாகவே இருக்கும். அப்படியே கஷ்டமாக வந்தாலும் பாதி அடித்தாலே பாஸ் தான். வழக்கம்போலவே அனைவரும் இந்த தேர்விலும் வெற்றி பெற்று வர வேண்டுகிறேன்.

Wednesday, January 29, 2020

Gds ஊழியர்கள் MTS,Postman பார்ப்பது போல் PAஇடங்களில் தற்காலிகமாக பணிபுரியலாமா? என்பது குறித்து உங்களது கருத்துக்களை 15 தினங்களில் தெரிவியுங்கள் என்று அனைத்து CPMGஅவர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை டைரக்ரேட் இன்று வெளியிட்டுள்ளது.


Sunday, January 26, 2020

அஞ்சல் சொந்தங்களுக்கு  குடியரசு தின வாழ்த்துக்கள்...