Wednesday, August 12, 2020

Gds security bond recovery issue taken by FNPO P4 circle secretary reg.

 

Gds ஊழியர்களுக்கு இந்த கொரானா காலத்தில் செக்யூரிட்டி பாண்ட் கட்ட சம்பளத்தில் பிடித்தம் செய்து கஷ்டப்படுத்துவதை பார்த்து நமது FNPO P4 மாநில செயலராளர் சுகுமாறன் அவர்களே முன்வந்து CPMG-TN அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள விபரம் உங்கள் பார்வைக்கு.

சேலம் செக்யூரிட்டி பாண்டு தொகை 10,000 லிருந்து 1 இலட்சமாக உயர்த்தப்பட்டதால்  gds ஊழியர்களிடமிருந்து பத்தாயிரம் பிடித்து வருகின்றனர்.gds ஊழியர்கள் சம்பளமோ  ரூ.10,000/-, 12,000/- ,14,500/-  + D.A என்ற அடிப்படையில் பெற்று வருகின்றனர். சில டிவிசன்களில் பத்தாயிரம் பிடித்து விட்டனர். சில டிவிசன்களில் ரூ.3,000, 4,000 என்று அந்தந்த HPO-ல் பிடித்து வருகின்றனர்.

சம்பளத்தில் பிடிப்பது தொடர்பாக தகவலை  GDSஊழியர்களுக்கு தெரிவிக்கவில்லை.அவர்களுக்கும் செக்யூரிட்டி பாண்டுக்கான சம்பளபிடித்தம் பற்றி தெரியாது. அவர்கள் மாதக்கடைசியில்  சம்பளம் வாங்கும்போது தான்  தெரிந்து கொண்டனர்.இது தவறான நடைமுறை.

ஊழியர்களை கொரானா  பரவல் மிகவும் அச்சுறுத்தி வருகிறது.போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை செய்து வருகின்றனர். தொலைதூரத்திருந்து அதிக பணம் செலவு செய்து தங்களுடைய அலுவலகம் வந்து செல்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென்று கூடுதலாக அவர்களது சம்பளத்தை பிடிப்பதால் அவர்களால் அதை  சமாளிக்க முடியாது.

எனவே, எங்களது யூனியன் நமது CPMG-TNஅவர்களை இந்த பிரச்சனையில் தலையிட்டு செக்யூரிட்டி பாண்டு தொடர்பாக பிடித்த பணத்தை மீண்டும் GDSஊழியர்களிடமே தருமாறும், கொரானா காலம் முடிந்தபின்  10 தவணைகளில்  அதனை பிடித்திட கேட்டுக்கொள்கிறது.இது நிச்சயம் GDSஊழியர்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்.இது தொடர்பாக சாதகமான ஆர்டரை அளிக்க வேண்டுகிறேன்.🙏

இப்படிக்கு

P.சுகுமாறன்

FNPO  P4  மாநில செயலாளர்

பாண்டிச்சேரி.


Sunday, August 2, 2020

Inspector Posts LDCE Examination 2019 and IP Exam Results 2020- GS NUR-C sent letter to the Member (P)Click here to read

Com. R Seethalakshmi no more..

Com. R Seethalakshmi, Ex General Secretary, AIPEU Postmen and MTS, passed away today evening. Sudden death of her came as a shock.  She was a commited unionist. May the soul rest in peace.

IPPB :: Quarterly SMS alert charges of Rs.10- plus GST w.e.f 1st August 2020 ...

This is to inform all the concerned that India Post Payments Bank has introduced quarterly SMS alert charges of Rs. 10/- plus GST w.e.f. 1st August 2020 for all the customers.
All customers account will be charged with SMS alert charges w.e.f 01.08.2020
 Note: At the end of Quarter ending September 2020, SMS alert charges will be recovered only for Aug and September 2020 on a pro-rate basis for 2 months. Thereafter SMS alert charges will be debited at the end of delivery quarter.

Friday, July 31, 2020

Today meeting with CPMG-TN for GDS to Postmen Surplus.,etc reg.

அன்பார்ந்த அஞ்சல் சொந்தங்களே! 
இன்று 31.07.2020 (வெள்ளி கிழமை) FNPO-NUPE/ P4 தமிழ்மாநில சங்கத்தின் சார்பாக, தமிழ் மாநிலச் செயலர் திரு. P.சுகுமாறன்  அவர்களும், CCR Region-ல் உள்ள நமது FNPO, NUPE / P4தமிழ் மாநில நிர்வாகிகளும் மதிப்புமிகு.CPMG TN அவர்களை நேரடியாக சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினோம்.

1) கொரானா பாதிப்பு இன்னும் முற்றிலும் நீங்காத நிலையில் தமிழ் மாநிலம் முழுவதும் Postmen, MTS உட்பட அனைத்து அஞ்சலக ஊழியர்களுக்கும்   Roster அமல்படுத்த வேண்டும் என கூறினோம். 

 **பதில்* ->  ஆகஸ்ட் முதல் வாரத்தில் Roster அமல்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார். 

2) 2019 ஆம் ஆண்டின் Unanticipated  PA  காலியிடங்களை 2019 ஆம் ஆண்டில் LGO தேர்வு எழுதிய ஊழியர்களுக்கு, 31.12.2020 முடிய கணக்கெடுப்பின்படி வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினோம். 
  *பதில்*>> இது சம்பந்தமாக பரிசீலித்து  சாதகமான முடிவு எடுப்பதாக கூறினார்.

3) GDS to Postman Surplus உடனடியாக வழங்குமாறு தெரிவித்தோம். 

*பதில்* >> ஆகஸ்ட் முதல் வாரத்தில் Surplus Result வெளியிடுவதாக தெரிவித்தார்.

4) 01.01.1996 முதல் தபால்காரர்களுக்கு வழங்கப்பட்ட 3050 ஊதிய அடிப்படையில் இன்னும் ஓய்வு பெற்ற பல தபால்காரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வு ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது பற்றி விவாதித்தோம்.  

     *பதில்*>> இது சம்பந்தமாக உடனடியாக General Manager, Postal Accounts அவர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

5) இராமநாதபுரம் கோட்டத்தில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் பள்ளி/கல்வி நிறுவனத் தலைவரிடம் பெறப்படும் Bonofide சான்றிதழுடன் Orginal Receipts சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கூறி CEA தொகை கடந்த ஆண்டிலிருந்து மறுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தோம். 

 *பதில்*>> DPS (SR) அவர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

6) கண்டிஜன்டு ஆக பணிபுரிந்து MTS ஆக பணிபுரிந்து வருபவர்களுக்கு OLD Pension scheme அமல்படுத்த வேண்டும் என கூறினோம். 

*பதில்>>* பரீசிலீத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

 7) பணியிலிருக்கும் பொழுது இறந்த அஞ்சலக ஊழியர்களின் வாரிசு வேலை குறித்து கேட்டோம்.

 *பதில்*>> Directorate. பதிலுக்காக காத்திருப்பதாகவும், கமிட்டி கூடி தகுதி உள்ளவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

 8) நிலுவையில் உள்ள Medical Bill Claim செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கூறினோம்.

 *பதில்>>* ஆகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து Medical Claims செட்டில் செய்வதாக தெரிவித்தார்.

 இப்படிக்கு பாசமிகு சகோதரர் P.சுகுமாறன் தமிழ் மாநில செயலாளர், அகில இந்திய உதவி பொது செயலாளர் FNPO-NUPE/ P4.

Tuesday, June 9, 2020

இன்று கும்பகோணம் டிவிசனில் mts unfilled,postman declained காலியிடங்களில் தேர்ந்தெடுக்ப்பட்டுள்ள 
கணேஷ்ராஜா Bpm,மாத்தூர் B.O, புவனேஸ்வரி EDDA, ஐய்யாவடி B.Oமௌலி ED packer,திருவிடைச்சேரி, திலகவதி,BPM,பம்ப்ப்படையூர், பாபுராஜ் நரசிங்கன்பேட்டை ஆகியோருக்கு வாழ்த்துக்கள் உங்களது போஸ்ட்மேன் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.💐💐🤝🤝

Friday, June 5, 2020