Friday, August 14, 2020

Gds surplus. Reg...

 

போஸ்ட்மேன் ஆகட்டும், PA ஆகட்டும் சர்ப்ளஸ் விசயத்தில் GDS ஊழியர்களுக்கு வாங்கி தராமல் அப்பட்டமான துரோகத்தை செய்தது தமிழக NFPE  P3-தான் என்பதை  தெரிந்து இருந்தும் சிலர் கிணற்று தவளையாக தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்..எனவே FNPO GDS ஊழியர்கள் தெரிந்து கொள்ள இந்த விளக்கத்தை பதிவிடுகிறேன்.


முன்பு 1989 போஸ்ட்மேன் தேர்வு விதியில் சர்ப்ளஸ் தொடர்பாக ரீஜின் அளவில் நிரப்பிட கூறியிருந்தது. அதன்பிறகு வந்த 2010 தேர்வு விதியில் சர்ப்ளஸ் பற்றி எதுவும் கூறப்படாததால், பிறகு  2012 -ல் சர்ப்ளஸ் குறித்து  neighbouring division என்று  தேர்வு விதியில் திருத்தம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலத்தில் 2015 போஸ்ட்மேன் தேர்வு முதலே சர்ப்ளஸ் என்பது மாநில அளவிலே கொடுத்து வருகிறார்கள்.


ஆனால், நமது சர்க்கிளில் ரீஜின் அளவில் எடுப்பதால் சென்னை போன்ற ரீஜினில் உள்ளவர்களுக்கு ( அங்கே சில டிவிசனில் ஒரு GDS ஊழியர்கள் கூட பணியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).  அதுவும் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு கூட ஈசியாக வேலை கிடைத்து வந்தது. ஆனால் மற்ற டிவிசனில் மிக மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதாவது மாநில அளவில் சர்ப்ளஸ் லிஸ்ட் எடுத்தால் முதல் பத்து இடங்களில் வருபவர்களுக்கு கூட வேலை கிடைக்காத நிலை இருந்து வந்தது. அப்போது gdsnfpe kumbakonam dvn secretary ஆக இருந்தேன்.பலமுறை இது குறித்து வலியுறுத்தி வந்தேன். 


ஏன் இதை  NFPE-ல் இருந்த P4,P3 மாநில செயலர்கள்  பேசி,கேட்டு  வாங்கவில்லை. நான்,  தோழர் JR சார், தன்ராஜ் சார், வீரமணி சார், FNPO சுகுமாறன் சார் உள்ளிட்டவர்களோடு  CPMG அலுவலகத்தில் விவாதித்திள்ளோம். அந்த  சூழ்நிலையில் தான் FNPO  சுகுமாறன் சார் இதை கையிலெடுத்து பேசி வந்தார்.  


 நமது  கும்பகோணம் , கோவில்பட்டி, திருப்பத்தூர் டிவிசனை சேர்ந்த GDS ஊழியர்கள் போஸ்ட்மேன் தேர்வில்  அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் குஜராத்தில் நிரப்புவது போல் மாநில அளவில் சர்ப்ளஸ் நிரப்பாததால் 2015 ஆண்டு முதலே GDS to postman இடங்களை இழந்து வந்ததை மறக்க வேண்டாம்.


அது போல  முந்தைய 2010,2012 Gds to PA  தேர்வுகளில்  Dte.Letter. No-60-127/85-SPB-I dated on 27.07.1989 படி  சர்ப்ளஸில் நிரப்பியுள்ளனர்.  அந்த 2010,2011 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மொத்தமே 4 பேர்கள் மட்டும் தான். அதில் 3 பேர்களுக்கு அவர்களது சொந்த டிவிசனில் அவர்கள் சார்ந்த OBC,SC, இடஒதுக்கீடு இடங்கள் இல்லாமல் வேறு டிவிசனில் இருந்தாலும் தேர்வு எழுத அனுமதித்து ,தேர்வில் வெற்றி பெற்றதும்  அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் படி  அவர்களை வேறு டிவிசன்களில் உள்ள OBC,SC இடங்களில்  ஒதுக்கீடு செய்து  நிரப்பினர்.


 ஆனால், அதன்பிறகு நடந்த 2013,2014 gds to PA தேர்வில் இது போல்  நிரப்ப மறுத்தனர். இதை  NFPE P3 கேட்க மறுத்ததால் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தோம். gdskumbakonam website-லும் இது கோரிக்கையாக வந்தது


 கும்பகோணம், நாகப்பட்டினம், விருத்தாசலம், தஞ்சாவூர் GDS ஊழியர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சர்ப்ளஸ் குறித்து  டைரக்ரேட்டை எதிர்தரப்பாக குறிப்பிட்டு கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தனர். உண்மையை உணர்ந்து கொண்ட  FNPO தியாகராஜன் சார் டைரக்ரேட்டுக்கு கடிதம் எழுதினார். அதனை தொடர்ந்து தான் MTS, Postman புதிய தேர்வு விதிகளில் மிக தெளிவாக சர்ப்ளஸ் தொடர்பாக விளக்கி உள்ளனர் என்பதை மறவாதீர்கள்.


அதன்பிறகு வந்த 2015,2016, 2017,2018 gds to PAதேர்வில் இது போன்ற சூழல் வந்த போது தேர்வுக்கான விண்ணப்பங்களை வாங்க மறுத்தனர்.டைரக்ரேட் கூட முதலில் அப்படி சர்ப்ளஸ் தர முடியாது என்று கூறியது. NFPE யூனியனை சார்ந்தவர்களோ gds to PA  தேர்வில் சர்ப்ளஸ் இல்லையென்று வாட்ஸ்அப் குரூப்புகளில் வாதிட்டு வந்தனர்.. நான் பலமாக எனது எதிர்ப்பினை தெரிவித்து  ஆதாரங்களோடு சுட்டி காட்டி வந்தேன். 


 உடனடியாக FNPO P3 சரவணன் சார் கடிதம் எழுதி பல நாட்கள் விளக்கி கூறி நீண்டதொரு போராட்டத்தை நடத்திய பின்பே  ஏற்கனவே இருந்த Dte.Letter. No-60-127/85-SPB-I dated on 27.07.1989 படி   LGO உள்ளிட்ட gds to PAதேர்வுக்கு சர்ப்ளஸ் முறை வழங்குவதாக தெரிவித்தது. 


முதன்முறையாக தற்போது RMS காலியிடங்களிலும் நூற்றுக்கணக்கான GDSஊழியர்கள் PA/SA பணிநியமனம் பெற்றுள்ளனர். Mailguardஆக வர உள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க போராடிவர்கள் FNPO சரவணன் சார்,சுகுமாறன் சார்  தான் என்பதை மறவாமல் சர்ப்ளஸில் வரும் தோழர்கள் அந்தந்த பகுதியில் உள்ள  FNPO யூனியனில் இணைய வேண்டுகிறேன்!

1 comment:

  1. Sir next gds to pa exam la vacant varuma because postman to pa unfilled vacant solluranka sir

    ReplyDelete