Wednesday, August 12, 2020

Discuss about GDS ,postman issues with FNPO P4 circle secretary reg.

 அன்பார்ந்த அஞ்சல் சொந்தங்களே!

நமது FNPO P4 மாநில செயலாளரிடம் GDS,Postman உள்ளிட்ட பிரச்சனைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளேன்.


1. GDS to postman surplus ரிசல்ட் பல மாதங்களாக மீண்டும் மீண்டும் எதாவது ஒரு காரணத்தை கூறி இழுத்தடிக்கப்பட்டு வருவதால் GDS ஊழியரிலிருந்து வந்தவன் என்பதால்   இதை எதிர்பார்த்து காத்திருக்கும் GDS ஊழியர்களின் கவலையை FNPO P4 மாநில செயலாளர் சுகுமாறன் அவர்களிடம் எடுத்து கூறினேன்!


அவரும் நான்  ADஅவர்களிடம் கூறியுள்ளேன்.இந்த வாரம் மேலும் தாமதமின்றி ரிசல்ட் வந்துவிடும். நான் அதை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.ரிசல்ட் போடுவது ரகசியமான நடைமுறை.அந்த வேலை நடைபெறும் அறைக்குள் தினமும் அங்கே சென்று கேட்டதாக மற்றவர்கள் போல் என்னால் கூற முடியாது. நம்புங்கள் கண்டிப்பாக போட்டு விடுவர் என்றார்.


2. Postman to PA  LGO 2019 தேர்வுக்கு தேர்வு விதியில் கூறப்பட்டபடி 50% காலியிடங்களை முழுவதுமாக ஒதுக்காததால் ஏற்பட்ட unandicipted vacancies பிரச்சனையில் டைரக்ரேட் இடமிருந்து ஆர்டர் இன்னும் வாராதது குறித்து வலியுறுத்திய போது 22-7-20 அன்றே மாநில நிர்வாகம் இது தொடர்பாக அனைத்து PMG-களுக்கும் மெயில் அனுப்பி இருந்ததாகவும், கோவை, திருச்சி மண்டலம் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால் சரியாக எடுக்கப்படாத காலியிடங்களை பெற முடியவில்லை என்று AD recruitment அவர்கள் கூறியதால் இது தொடர்பாக DPS HQ அவர்களிடம்  முறையிட்டுள்ளதாக கூறினார். ஏற்கனவே யூனியன் சார்பாக டைரக்ரேட்டிலும் முதன் முதலில் கடிதம் கொடுத்து உள்ளதையும் குறிப்பிட்டு இந்த மாதம் நல்ல செய்தி வரும் என்றார்.


3. பல டிவிசன் GDS ஊழியர்கள் தொடர்ந்து  வலியுறுத்தி வந்த சேலம் செக்யூரிட்டி பாண்ட் தொடர்பாக பிடித்த பணத்தை திரும்ப தரவும் ,10 தவணைகளில் பிடிக்க வேண்டியும் கடிதம் எழுதியுள்ளதை குறிப்பிட்டார்.


4. Gds transfer-ல் ஒவ்வொரு டிவிசனும்  பலவாறு கூறி விண்ணப்பம் பெற்றதையும், இன்னும்  பணியிடமாற்றம் ஆர்டர் வாராதது குறித்தும்  வலியுறுத்தி உள்ளேன்.பேசுவதாக கூறியுள்ளார்.


5. TRCA தொடர்பாக புள்ளிக்கணக்கீடு சரியாக எடுக்கபடாததால்  சம்பள குறைவாக வருவதை கேட்டதற்காக ஒரு டிவிசனில் EDDA ஊழியரை put off duty செய்து பிறகு removed service கொடுத்த SP-ன் அதிகார அத்துமீறலை சம்பந்தப்பட்ட மேலதிகாரிஅவர்களிடம் பேசுவதாக உறுதியளித்துள்ளார். 


6.  LGO 2019 PH ரிசல்ட் வெளியிட கேட்டுள்ளதாகவும் அது தொடர்பான ஆணை விரைவில் வரும் என்பதை தெரிவித்தார்.இதன் மூலம் 2019 gds to pa தேர்வு எழுதி வெற்றி பெற்ற சிலருக்கு PA வாய்ப்பு கிடைக்கும்.


7. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சுட்டி காட்டி டைரக்ரேட் gds to PA, postman, MTS நியமனங்களை நேரடி நியமனமாக கருத ஏற்கனவே கூறியிருந்தது.

 2010,2011ஆண்டு GDS to PA தேர்வில்  வெற்றிபெற்றவர்கள் மொத்தமே 4 பேர்தான். அதில் 3 பேர் வேறு மற்ற டிவிசனில் ஒதுக்கீடு பெற்று சர்ப்ளஸில் சென்றதை குறிப்பிட்டு,2013,2014- ல் மட்டும் சர்ப்ளஸ் இல்லை என்று மறுத்ததை மீண்டும் கையிலெடுத்து வாங்கிதர உறுதியளித்துள்ளார்.


8. முன்பு outsiderஆக இருந்து தற்போது GDSஆக இருக்கும் ஊழியர் ஒருவருக்கு வர வேண்டிய MTS வேலை  குறித்து தொடர்ந்து வலியுறுத்தியதால் தற்போது ஆர்டர்  வந்து உள்ளதையும் குறிப்பிட்டார்.


9. Gds to postman தேர்வில் EWS தொடர்பான இடங்கள் சரியாக எடுக்கப்படாதது குறித்து  சரிபார்த்து பிறகு எடுப்பதாக கூறி உள்ளார்.


10. மெயில் ஓவர்சீஸ், சார்டிங் போஸ்ட்மேன் பணியிடங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப கோருவதாக கூறியுள்ளார்.


 ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த கொரானா சூழலில் வீட்டிலுள்ளவர்கள் தடுத்தும் பாண்டிச்சேரியிலிருந்து  தனியாக காரை எடுத்து கொண்டு சென்னை வந்து நமது gds, postman ஊழியர்கள் பிரச்சனைகள் தொடர்பாக  CPMG அலுவலகத்தில் FNPO பொறுப்பாளர்களை அழைத்து கொண்டு சென்று  இவர் பேசியது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விசயம்.மிக்க நன்றி சார்


No comments:

Post a Comment