REQUEST FOR RELAXING THE CONDITION OF EDUCATION QUALIFICATION FOR GDS TO APPEAR IN POSTMAN/MAIL GUARD EXAMINATION
GDS சம்பள கமிசன் பரிந்துரையில் GDS சம்பளம் MTS சம்பள அடிப்படையில் தான் நிர்ணயிப்போம் என்று இலாகா சொல்கிறது.அப்படி என்றால் MTSக்கு +2 தேர்ச்சி தேவையில்லை என்பதை நமக்கும் கொடுக்க கேட்க வேண்டாமா? முந்தைய RR amendment-ல் education qualification not applicable for GDS என்று இருப்பதையும் சுட்டி காட்டி இருக்கனும்.
தோழர்களே! சுப்ரீம் கோர்ட்டில் நாம் நமது ஓய்வு நேரத்தில் தான் அஞ்சல்துறை பணியை செய்வதாக கூறியும், கல்வித்தகுதி குறைவானவர்கள். வசதிபடைத்தவர்கள். எனவே தான் நமக்கு இலாகா அந்தஸ்து தர மறுப்பதாக இலாகா முந்தைய காலங்களில் பதிலளித்துள்ளது. அதனடிப்படையிலே சுப்ரீம் கோர்ட்டும் 1977 -ல் ராஜம்மா வழக்கு தொடங்கி, , 1997 காமேஷ்வர் பிரசாத் வழக்கிலும் தீர்ப்பளித்தது.
உண்மையில் தற்போது GDS நிலைமை என்ன? GDS க்கு ஏது தோழர்களே ஓய்வு நேரம்.? காலை 10 .30 மணி முதல் மதியம் 2 மணி என்பது ஓய்வு நேரமா? காலமாற்றத்தில் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு இன்றைக்கு PA வேலைகளை சேர்த்து மிகச்சிறிய கருவியில் நெட்வொர்க்கோடு போராடி 8 மணி நேரம் தாண்டி வீட்டிற்கு எடுத்து சென்றும் வேலை செய்து வருகிறார்கள் . கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் பணி செய்த பின்பே இந்த வாய்ப்பு தரப்படுகிறது. மேலும் இலாகா ஊழியர்கள் போலவே ஜனவரி 1-ந்தேதி சர்வீஸ் கணக்கில் எடுக்கிறார்கள். தேர்வும் ஒன்று தான்.
GDS தான் இலாகாவினரை விட அதிகமாக வருமானத்தை ஈட்டி தருகிறார்கள். எனவே GDS-க்கு இலாகாவினருக்குரிய சலுகைகள் தரப்பட வேண்டுமென கேட்க வேண்டாமா? எப்படியாவது GDS-க்கு கிடைப்பதற்கு இதையெல்லாம் சுட்டிகாட்டி கேட்க வேண்டுமே தவிர.மீண்டும் +2 படிக்க வேண்டுமென்று கேட்கலாமா? இதை P3 சொன்னால் இப்படிதான் இருக்கும்.கடந்த 3ஆண்டுகளாக GDSக்காக என்ன செய்தார்கள்? ஏன் GDSக்கு என்ன தர வேண்டுமென்று இவர்கள் தீர்மானிக்கிறார்கள்?
No comments:
Post a Comment