Saturday, February 2, 2019

NOTIONAL MONETARY BENEFITS TO POSTMAN/MAIL GUARDS W.E.F01.01.1996 TO 10.10.1997 IN THE REVISED PAY SCALE OF RS. 3040-4590


NFPE-  P4             தமிழ்மாநிலம்                  
31.01.2019.

தோழர்களே ! 
தபால்காரர்களுக்கு 10.10.1997 க்கு பதிலாக 01.01.1996 முதல் 3050-4590 ஊதிய விகிதத்தை அமல்படுத்த வேண்டும் என்று நமது அகில இந்திய சங்கத்தின் 20 ஆண்டு கால நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது. ஆனாலும் அஞ்சல் துறை உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. நமது அகில இந்திய சங்கம் தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வந்தது.  23.05.2018 அன்றுதபால்காரர்களுக்கு 10.10.1997 க்கு பதிலாக 01.01.1996 முதல் 3050-4590 ஊதிய விகிதத்தை அமல்படுத்த வேண்டும் என்று  அஞ்சல்துறை  உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் தமிழ் மாநிலம் உள்ளிட்ட சில மாநில அஞ்சல் நிர்வாகங்கள் "11.10.1997 முதல் நாளது தேதி வரை  நிலுவைதொகை  வழங்கப்பட வேண்டுமா??" என்று  சந்தேகம் எழுப்பி 23.05.2018 தேதியிட்ட   இந்த உத்தரவை அமல்படுத்த காலம் தாழ்த்தி வந்தன. 25.09.2018 அன்று  தமிழ்மாநில அஞ்சல் நிர்வாகம் 23.05.2018 தேதியிட்ட உத்தரவில் சில விளக்கங்கள் கேட்டு  அஞ்சல் துறை இயக்குனரகத்திற்கு  கடிதம் எழுதியது.இதற்கிடையில்அகில இந்திய  சங்கத்தின் தொடர் முயற்சியால் 23.05.2018 தேதியிட்ட அஞ்சல்துறை உத்தரவானது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலானது. எனவே இதனை காலதாமதமின்றி உடனடியாக அமல்படுத்த  வேண்டுமென்று 22.11.2018 அன்று அனைத்து மாநில அஞ்சல் நிர்வாகங்களுக்கும் அஞ்சல் இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது. 

  இதனடிப்படையில் தமிழ்மாநில நிர்வாகமும்  அனைத்து  மண்டலங்களுக்கும் 04.12.2018 அன்று    23.05.2018 தேதியிட்ட அஞ்சல் இயக்குனரத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.  ஆனாலும் மேற்கு மண்டலம் (நீலகிரி நீங்கலாக ) தவிர அனைத்து மண்டலங்களும் உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தின.  நமது மாநிலச் செயலர் 
23.5.2018 தேதியிட்ட  அஞ்சல்துறை இயக்குனரகத்தின் உத்தரவை அமல்படுத்த மறுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும்,  "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்" என்ற அடிப்படையில் தமிழ் மாநில முதன்மைஅஞ்சல் துறைத் தலைவருக்கு 18.01.2019ல்   கடிதம் எழுதினார். 

அதன் பயனாக 23.01.2019 அன்று தமிழ்மாநில அஞ்சல் நிர்வாகம் தபால்காரர்களுக்கு 01.01.1996 முதல் 3050-4590 என்ற ஊதிய விகிதத்தினை அமல்படுத்த  வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்துமாறு  சென்னை பெருநகர மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம் ஆகிய மண்டலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கமளித்து இன்று 31.01.2019 அஞ்சல் இயக்குனரகம் உத்தரவு வெளியிட்டுள்ளது .

 இந்த உத்தரவு மூலம் 01.01.1996 முதல் 10.10.1997 வரை Notional Benfit ஆகவும் 11.10.1997 முதல் நாளது தேதி வரை நிலுவை தொகையுடன் கூடிய பணப்பயனாகவும் வழங்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.இதைதான் நமது அஞ்சல் நான்கு சங்கம் தொடக்கத்தில் இருந்தே வலியுறுத்தி வந்தது. இது நமது அஞ்சல் நான்கின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். 
வாழ்த்துக்களுடன் 
தோழர் G.கண்ணன் 
மாநில செயலர்.




No comments:

Post a Comment