Wednesday, February 21, 2018

அன்பு அஞ்சல்  GDS  சொந்தங்களே வணக்கம்.
     ஆண்டுக்கு ஆண்டு நமது மேல் அரசும் அஞ்சல் நிர்வாகமும் கணக்கு துவங்கச்சொல்லி நிர்பந்தத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றனர் என்பது நாம் அறிவோம். நடப்பு ஆண்டு சற்று வித்தியாசமாக NET Account என ஒன்று  தமிழ் நாட்டில் வலம் வந்துகொண்டு இருக்கிறது. 

அதில் நீ முந்தி , நான் முந்தி என ஊழியர்களை  கொம்பு சீவி விடுவது மட்டுமல்லாமல் கோட்ட நிர்வாகங்கள் மண்டல அளவில் நீ முந்தி , இல்லை நான் தான் இவ்வாரம் முதலிடம் என கூறிக்கொண்டு வாரா வாரம் வாட்சாப்பில் தேர்தலில் வாக்கு எண்ணும்  போது செய்திகள் வெளியிடுவது போல் வேடிக்கையாக இருக்கிறது.  வாக்கு எண்ணிக்கை முடிவு 31.03.2018 -ல் தெரியும்.  நிர்வாகம் அதோடு நிறுத்திக் கொண்டால் சரி, 2018-2019 க்கு உடன் Target வைத்து தனது பணியை மீண்டும் தொடர்ந்தாலும் தொடரும். காரணம் மண்டலத்தில் முதலிடம் அல்லது நமது மாநிலம் அகில இந்திய அளவில் முதலிடம் என முந்தpovathu யார் என பார்க்க வேண்டாமா ?. 
     
காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் எமது ஊழியன் நீங்கள் போடும் புள்ளியில் வாங்கும் ஊதியத்தை குறைத்து நிர்ணயித்து விட்டால், அடுத்த மாதம் தனது ஊதியம் குறையுமோ அல்லது மறுமாதம் குறையுமோ என தனது ஊதியத்தை நம்பி உள்ள ஊழியர்களின் குடும்பத்தை தத்தளிக்க வைக்குமே என ஒருகணம் நினைக்க  வேண்டாமா ? 
   
ஏதோ மேலிருந்து புள்ளி நிர்ணயம் செய்து ஆணை வந்தால், அவ்வாறு புள்ளி நிர்ணயிப்பது கூடாது தொழிலாளர் செய்யும் வேலைக்கு இணையாக  புள்ளி நிர்ணயம் செய்யுங்கள் என தொழிற்சங்கம் எடுத்து கூறினாலும் அதை காதுகொடுத்து கேட்காத நிர்வாகத்தின் ஆணையை அப்படியே நடைமுறை படுத்தும் மாநில,கோட்ட நிர்வாகம் இன்று  தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஊதியம் குறைக்கப்பட்டு கொய்யோ முறையோ என கதறுகிறார்களே உங்கள் காதில் விழவில்லையா , எப்படி காதில்விழும் அத்துணை ஊழியனும் அஞ்சல் நிர்வாகத்தின் அடிமையாச்சே!!!! 

"வள்ளுவனின் வார்த்தைப் படி மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் அளவுக்கு அதிகமாக ஏற்றினால் அவ் வண்டியின் அச்சு முறிந்து விடும்"

மீண்டும் நாளை இவன் AIPEU-GDS TN

No comments:

Post a Comment