Sunday, February 25, 2018

02.03.2018 தொடர்ந்து நெருக்கடிக்கொடுக்கும்.......

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.


02.03.2018 தொடர்ந்து நெருக்கடிக்கொடுக்கும் நிர்வாகத்தை எதிர்த்து மாநிலம்  தழுவிய ஆர்ப்பாட்டம் 


தமிழகத்தில் என்ன நடக்கிறது சிந்தியுங்கள் தோழர்களே!!!!

தினம் தினம் காலையில் நமது காதில் ஒலிப்பது நமது அதிகாரிகளின் கைப்பேசி செய்திகள் தான், நேற்று என்ன செய்தீர்கள் , இன்று எத்தனை கணக்குகள் துவங்கப்போகிறீர்கள், எத்தனை ஆயுள் காப்பீடு கணக்குகள், எத்தனை லட்சத்துக்கு , எவ்வளவு பிரிமியம் இந்த தகவல் தான் நீங்கள் பெறுவது என்பது வழக்கமாகிவிட்டது.

ஆண்டுக்கு ஆண்டு நாம் பெறும் நெருக்கடி இவ்வாண்டு அனைத்து அஞ்சல் 3, அஞ்சல் 4 ஊழியர்களையும் விட்டு வைக்கவில்லை என்பது தான் உண்மை .

தமிழகத்தில் நெருக்கடியின் தாக்கம் அளவுக்கு அதிகமாக தலைதூக்கி ஆட்டம் போடுகிறது என்பதை அனைவரும் உணருகின்றனர். இருந்தும் நமது GDS ஊழியர்கள் மேல் தொடுக்கும் அம்பு அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று அதிக கணக்குகளும் பாலிசுகளுடன் வந்து அன்றைய நிலவரம் மாலை தெரிவிக்க வேண்டும் என கோருகின்றனர் என அனைத்து கோட்டச் செயலரும் கூறிவருகின்றனர். ஆகவே தமிழ் மாநில AIPEU GDS செயலாளர் RDR நமது தமிழ் மாநில NFPE COC கன்வீனர் தோழர் G .கண்ணன் , அஞ்சல் 3 செயலர் தோழர் J.R இவர்களை தொடர்ந்து தமிழகம் தழுவிய இயக்கம் நடத்தி மாநில நிர்வாகத்தின் நெருக்கடிக்கு தடை ஏற்படுத்திட வேண்டும் என  வலியுறுத்தி வந்தது. 

இதன் காரணமாக நமது கன்வீனர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தமிழக FNPO பொறுப்பாளர்களை அணுகி இயக்கம் நடத்திட முடிவு எடுத்துள்ளனர்.

ஆகவே அனைத்து FNPO  தோழர்களையும் இணைத்துக் கொண்டு மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை வரும் 02.03.2018 மாலை கோட்ட மட்டத்தில்  நடத்திட வேண்டும் என தமிழ் மாநில AIPEU GDS சங்கம் கேட்டுக்கொள்கிறது.

கோட்ட செயலர்கள், மாநில, அகில இந்திய பொறுப்பாளர்கள் சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி, ஆர்ப்பாட்ட புகைப்படங்கள் எனது வாட்சாப் (94424 75290) எண்ணுக்கு அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறது.  

1 comment:

  1. திரு தம்பி ராஜா BPM அவர்களுக்கு BPM அன்பழகன் தீர்த்தமலை So 6369 06 எழுதுவது உமது வெப்சைட்டில் வரும் அனைத்தும் மிக பயனுள்ளதாக உள்ளது But அதில் பாதிக்கு மேல் dis play_ ல் மறைகிறது படிக்க முடியவில்லை என்பதை தெரிவித்துவித்துக் கொள்க்றேன்

    ReplyDelete