Tuesday, October 10, 2017



     முக்கிய செய்திகள்-- NFPE  TIRUNELVELI

அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாகிறது .சேமிப்புக்கணக்குகளை தொடங்கும்பொழுது ஆதார் இல்லையென்றால் -அதை பெறுவதற்கு விண்ணப்பித்த ஆதாரங்களை காட்டினாலும் போதும் .பழைய டெபாசிட்டர்களும் தங்கள் கணக்குகளில் ஆதார் எண் இணைக்காதவர்கள் 31.12.2017 குள் இணைத்திட வேண்டும் எனவும் 21.09.2017 நிதியமைச்சக உத்தரவு தெரிவிக்கிறது .
----------------------------------------------------------------------------------------------------------------------
   அஞ்சலக கணக்குகளின் முதிர்வுத்தொகை --மற்றும் மாதாந்திர வட்டிகளை சேமிப்பிக்கணக்குகள் மூலம் தான் கிரெடிட் செய்வது என்பது 01.12.2017 முதல் கட்டாயமாகிறது .இதற்கான அறிவிப்புகளை விரிவாக  செய்வது மேலும் தபால்காரர்களை கொண்டு வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கவும் அறிவுறுத்த படுகிறது (SB Order No. 15/2017 )
 இதர செய்தி
நேற்று நமது மேல்மட்ட அதிகாரிகளை சந்தித்த நிகழ்வுகளை குறித்து மாநிலச்சங்கம் சார்பாக சிறப்பு அறிக்கையினை மாநிலசெயலர் வெளியிட்டிருக்கிறார் .கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களிலும் தனது செயல்பாட்டை பதிவு செய்திருக்கிறார் .மாநிலசெயலர் தோழர் JR அவர்களுக்கு நன்றிகளை பேரவை சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .
குறிப்பாக RULE 38 இடமாறுதல்களில் CPMG அவர்கள் ஒத்துக்கொண்டபடி 2 ஆண்டு சேவைமூடித்த ஊழியர்களுக்கும் அவர்களின் பிரச்சினைகளின் தன்மையை குறித்து அவர்களது இடமாறுதல்கள் பரிசீலிக்கப்பட்டால் பல புதிய /இளைய தோழர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

No comments:

Post a Comment