Friday, March 31, 2017

SUCCESS TO CIRCLE UNION'S CONTINUED EFFORTS AGAINST THE ATROCITIES OF SPOs., POLLACHI !..

SUCCESS TO CIRCLE UNION'S CONTINUED EFFORTS AGAINST THE ATROCITIES OF SPOs., POLLACHI ! ATLAST WE WON THE BATTLE !

மாநிலச் சங்கத்தின் விடா முயற்சிக்கு வெற்றி !
கொட்டமடித்த அதிகாரி அதிரடி மாற்றம் !
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
மாநிலச் சங்கத்தின் விடா முயற்சி காரணமாக, பொள்ளாச்சி கோட்டக் கண்காணிப்பாளர் திரு. சகாயராஜ் அவர்கள் மீது, அவரது ஒழுங்கீனங்கள் மற்றும் ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்து நாம் அளித்த புகார் மனு மீது IPS அதிகாரி தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு அதன்மீதான விசாரணை அறிக்கையும் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தது பலருக்கு, குறிப்பாக கோவை மண்டலத் தோழர்களுக்கு தெரியும்.

இந்த அறிக்கைமீது உடன் நடவடிக்கை வேண்டியும், மேலும் பல ஒழுங்கீனங்களை எடுத்துக் கூறியும் பொள்ளாச்சி கோட்டச் செயலர் தோழர் அய்யாசாமி, உடுமலை கிளைச் செயலர் தோழர். ராமசுப்பிரமணியன் மற்றும் கோவை கோட்டச் செயலர் தோழர். காந்தி , மண்டலச் செயலர்  தோழர். ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்துச் சென்று கடந்த 9.2.2017 அன்று மேற்கு மண்டல PMG திருமதி. சாரதா சம்பத் அவர்களைச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி நாம் வலியுறுத்தினோம்.

அவர்களும் இந்த விசாரணை மீது மேலும் சில ஆவணங்களைப் பெற்று மேல் நடவடிக்கைக்கான தன்னுடைய உரிய பரிந்துரையுடன் CPMG அவர்களிடம் அனுப்புவதாக உறுதியளித்தார்.

அவ்வாறே அவர் அனுப்பிய பரிந்துரை மீது முதற்கட்ட நடவடிக்கையாக இன்று திரு. சகாயராஜ் அவர்கள் தல்லாகுளம் போஸ்ட் மாஸ்டராக உடனடி இடமாற்றம் செய்யப்பட உத்திரவிடப் பட்டார்.
ஆனால் அவர் Charge கொடுக்க மறுத்து, ஏற்கனவே கடந்த ஆண்டு, முந்தைய PMG  காலத்தில்   சென்றது போல , நீதிமன்றம் சென்று தடையாணை பெறுவேன் என்று கொக்கரித்தார்.

இதனால் கோபமுற்ற PMG அவர்கள், அவர் உடனடியாக RELIEVE  ஆகாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று கூறியதால் வேறு வழியில்லாமல் இன்றைய மதியமே வெளியேற்றப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலை கீழாக நின்றவர் எவரும் தொடர்ந்து நின்றதாக 
சரித்திரம் கிடையாது.
வெகுஜன விரோதிகள், ஊழியர் விரோதிகள் தொடர்ந்து வென்றதாக சரித்திரமும் கிடையாது.
இது பல தான்தோன்றி அதிகாரிகளுக்கு 
நீதி புகட்டும் பாடமாகும்.

இந்த பிரச்னையில் சரியான விசாரணை மேற்கொண்டு நீதியை நிலை நாட்டிய மேற்கு மண்டல PMG திருமதி. சாரதா சம்பத் அவர்களுக்கு மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள். உரிய நடவடிக்கை எடுத்து  உத்திரவு இட்ட  CPMG  அவர்களுக்கும் நம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அநீதிக்கெதிராக, பாதிப்புகளைக்கண்டு பயம் கொள்ளாமல் தொடர்ந்து தொய்வின்றிப் போராடிய பொள்ளாச்சி அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். அய்யாசாமி, கோட்டத் தலைவர தோழர். AGC, போஸ்ட்மாஸ்டர் தோழர்.ஜவகர் , உடுமலை செயலர் தோழர். ராமசுப்ரமணியன் உள்ளிட்ட  முன்னணி நிர்வாகிகளுக்கும் இதர தோழர்களுக்கும் நம் வீர வாழ்த்துக்கள் !

ஒரு சேலம் மேற்கு, ஒரு வேலூர், ஒரு ஈரோடு, ஒரு திண்டுக்கல், ஒரு அம்பத்தூர் வரிசையில் இன்று நம் பொள்ளாச்சி !

இடைவிடாது போராடிய தோழர்களை வாழ்த்துங்கள் தோழர்களே !

கைபேசி :-
பொள்ளாச்சி தோழர்.
அய்யாசாமி: 9843009345
உடுமலை தோழர். 
 
ராமசுப்ரமணியன்  : 9442190694

வாழ்த்துக்களுடன்...
NFPE அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கம்

No comments:

Post a Comment