Wednesday, December 21, 2016

GDS COMMITTEE REPORT...REG

அன்புத் தோழர்களே ! நமது  GDS ஊதியக்குழு  தொடர்பான  செய்திகள். 

 நமது ஊதியக்குழு திரு கம்லேஷ் சந்திரா தலைமையில் அமைக்கப்பட்டு கடந்த 24.11.2016 அன்று நமது இலாக்கா முதல்வருக்கு அளிக்கப்பட்டு விட்டது ஆனால் இது நாள் வரை அந்த அறிக்கையை அஞ்சல்துறை வலைதளத்தில் பிரசுரிக்கப்படவில்லை.

     நமது NFPE சம்மேளன மா பொதுச்செயலர் தோழர் R.N.பராசர் அவர்கள் அஞ்சல்துறை முதல்வரை சந்தித்து பல முறை கேட்டுள்ளார். மிக காலதாமதம் செய்வது சரியல்ல என தெரிவித்து கடந்த டிசம்பர்  05 மற்றும் 06.12.2016 தேதிகளில் அந்தந்த இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு கேட்டுக்கொண்டார்.

    ஆனால் தமிழகத்தில் முதல்வர் செல்வி J .ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் எல்லா கோட்டங்களிலும் முழுமையாக நடத்த முடியவில்லை.
    இறுதியாக நமது மா.பொதுசெயலாளர் இலாக்கா முதல்வரை சந்தித்த பொழுது  நிச்சயமாக 31.12.2016 க்கு பிறகு அரசிடம் அனுமதி பெற்று அதற்க்கான நடவடிக்கை எடுக்கப்படும்  என உத்திரவாதம் அளித்துள்ளதாக நமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்போம் நல்லது நடக்க காத்திருப்போம் .
   இல்லையேல் !!! உடன் போராட்ட இயக்கங்களுக்கு நமது NFPE சம்மேளனம் அறைகூவல் விடுப்பதில் தயங்காது என்பதை நிரூபிப்போம். 

No comments:

Post a Comment