Wednesday, December 7, 2016

அம்மா பாரத ரத்னா விருது மட்டுமல்ல நோபல் பரிசு பெறவும் தகுதியானவர் ...

அம்மா பாரத ரத்னா விருது  மட்டுமல்ல நோபல் பரிசு பெறவும் தகுதியானவர் 

amma thittangal க்கான பட முடிவு

சுதந்திரமாக, துணிச்சலாக, நேர்மையாகச் செயல்படும் தன்மை உள்ளவராக. ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று பெரியார் நினைத்தாரோ அத்தகைய சிறப்புகளைக் கொண்டவர் அவர்.

 மக்கள் மத்தியில் கட்சிக்கு அப்பாற்பட்டு மிக அதிகபட்ச செல்வாக்கையும் மதிப்பையும் அன்பையும் பெற்ற மக்கள் தலைவராக ஜெயலலிதா இருந்தார்.


இவர்  கொண்டுவந்த  மக்கள் நல திட்டங்களை இந்தியாவின்  பிற  மாநிலங்கள்  மட்டுமல்லாது  உலக நாடுகளே  பாராட்டின. குறிப்பாக  இந்தியாவிற்கே  முன்மாதிரியாக 69% இட  ஒதுக்கீடு தந்து சரித்திரம் படைத்தவர் .பெண் சிசு கொலையை  தடுத்து நிறுத்திய தொட்டில் குழந்தை திட்டம் , அனைத்து  வீடுகளுக்கும்  விலையில்லா பேன் ,மிக்ஸி ,கிரைண்டர் திட்டம் ,பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு , விலையில்லா புத்தங்கள் ,பாடக் கருவிகள்,மடிக்கணினியுடன், மிதிவண்டியும் கொடுத்தவர் .மாணவிகளுக்கு சானிடரி நாப்கின், கழிப்பறை ,மருத்துவ வசதியை பள்ளியிலே செய்து தந்தவர் .

ஏழை பெண்கள் திருமண உதவியாக 50,000 ரூபாய் பணத்தோடு  தாலிக்கு 4 கிராம் தங்கம் தந்த தங்க தாரகை இவர் ,     

அம்மா காப்பீடு, அம்மா  மருந்தகம் , ஏழைகளின்  பசி போக்கும்  அம்மா  உணவகம் ,அம்மா மகப்பேறு பாதுகாப்பு திட்டம், என்று இவர் பெயரில் எண்ணற்ற மக்கள்நல திட்டங்களை  தந்து  தமிழக மக்களை  காத்து வந்த  தாய் இவரென்பது  மறுக்க முடியாத உண்மை .அதனால் தான் இன்று ,அவரை ஆராதிக்கும், அன்பு செலுத்தும் மக்கள் கூட்டம் அவருக்கு இருப்பது போல தமிழகத் தலைவர்கள் வேறு எவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவரது  மக்கள் நல  சேவைகளுக்கு  பாரத ரத்னா விருது  மட்டுமல்ல, நோபல் பரிசே தந்தால் தான் அந்த விருதுகளுக்கே மதிப்பு ஏற்படும். 

No comments:

Post a Comment