Monday, December 12, 2016

சங்க கவனத்திற்கு....


சங்க கவனத்திற்கு....

தோழர்களே !  நடந்து முடிந்த GDS TO  P.A  EXAM –ல PAPER  ரிசல்ட் வெளிவந்து கிட்டத்தட்ட 2 மாதம் கழித்து தான் தற்போது  PAPER -2  typing test-க்கு செல்ல உள்ளவர்களின் லிஸ்ட் அறிவித்துள்ளார்கள். முதலில் 83  பேர் EXAM –ல் பாஸ் செய்தவர்கள் என்று அறிவித்தார்கள். ஆனால் தற்போது 55 பேர் தான் PAPER -2  typing test-க்கு செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

ஒவ்வொரு டிவிசனிலும் 2 அல்லது 3 பேரை எடுத்துவிட்டார்கள். அதுவும் அந்த 28 பேரில் பெரும்பாலான பேர்  தற்போது PAPER -2  typing test-க்கு செல்ல உள்ளவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள். இவர்களும் அதிகமான மெரிட் பெற்றவர்கள்தானே. அட்லீஸ்ட் வெய்ட்டிங் லிஸ்டில் உள்ளவர்களாக கருதி PAPER -2  typing test-க்கு அனுப்பலாமே? இதை சரிசெய்யவேண்டாமா?

தற்போது, காலியிடமோ  250  உள்ளது. எனவே  பாஸ் செய்த 83  பேரையும் PAPER -2  typing test-க்கு அனுப்பலாமே.    2014 - DIRECT RECRUITMENT  P.A  EXAM –ல   என்ன நடந்தது ? முதலில் அறிவிக்கப்பட்ட காலியிடங்களோ 650  தான். ஆனால் நிரப்பபட்டதோ கிட்டத்தட்ட 1200  க்கு மேல். இது எப்படி சாத்தியம் ? அப்போது ,வெய்ட்டிங் லிஸ்டில் இருந்தவர்களை P.A  ஆக போடவில்லையா?

எனவே, GDS TO  P.A  EXAM –ல ,நமது GDS தோழர்களையும் அட்லீஸ்ட் வெய்ட்டிங் லிஸ்டில் உள்ளவர்களாக கருதி PAPER -2  typing test-க்கு அனுமதிக்க வேண்டும் .அப்படி அனுப்பினால் UNFILLED ஆக இருக்கும்  UR,OBC,SC பிரிவு இடங்களை, குறிப்பாக சென்னை ரீஜினில் உள்ள   காலியிடங்களில் இவர்களை கொண்டாவது நிரப்பலாமே? இதை பரீசீலிக்க கூடாதா?.

இல்லையென்றால் கிட்டத்தட்ட 200 இடங்கள் வீணாக டைரக்ட் எக்ஸாமுக்கு போய்விடாதா?  இந்தமாதிரி உள்ள பிரச்சினைகளை சரி செய்யவில்லை என்றால் GDS TO  P.A  EXAM என்பது ஒரு வெறும் கண்துடைப்பு தான். அல்லது  குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே கிடைக்கும்.  

தோழர்களே ! GDS TO  P.A  EXAM –ல இதற்குமுன் இவ்வளவு பேர் பாஸ் செய்ததில்லை. முன்பெல்லாம் 2 அல்லது 3 பேர் தான் பாஸ் செய்வார்கள்.  இதை உடனே CPMG  அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று  பாஸ் செய்த 83   பேரையும் PAPER -2  typing test-க்கு அனுப்ப செய்யலாமே.
 

O.K .  இதை யார் செய்வது?  NFPE சங்க P3, P4, GDS UNION முந்நாள், இந்நாள் மாநில, மத்திய செயலாளர்கள் இதனை பெற்று தருவார்கள்  என்று அனைத்து GDS தோழர்களும் நம்புகிறார்கள்.நம்பிக்கை உண்மையாகுமா?

1 comment: