Friday, October 21, 2016

POSTMAN , GROUP -D PLACE -ல வேலை பார்த்த GDS தோழர்களுக்கு ஒரு நற்செய்தி

 POSTMAN , GROUP -D   PLACE -ல  வேலை பார்த்த  GDS   தோழர்களுக்கு ஒரு நற்செய்தி.

நேற்றைய  தினம்  (20-10-16)  திருச்சி ரீஜினல் அலுவலகத்தில் நடந்த BI-MONTHLY மீட்டிங்கில்  POSTMAN , GROUP -D   PLACE -ல  வேலை பார்த்த  GDS   தோழர்களுக்கு பல கோட்டங்களில் 7-வது ஊதிய கமிசனின் புதிய சம்பள விகிதம் தராமல் பழைய சம்பள விகிதத்தில் தந்து வந்தனர்.  சம்பள அரியர்ஸ் போடாமல் இருந்து வந்தனர். 

இது குறித்து GDS NFPE  தமிழ்மாநில செயலர் தோழர் தனராஜ் அவர்கள், NFPE P3  மண்டல செயலர் தோழர் குமார் அவர்களிடமும், NFPE P4 மண்டலசெயலர் தோழர் கோவிந்தராஜ் அவர்களிடமும் ஏற்கனவே கூறியிருந்தார். இது குறித்து ''என்றும் ஊழியர்கள் நலனுக்காக உண்மையான அர்ப்பணிப்பு உணர்வோடு சங்க பணியாற்றி வரும்'' NFPE P3  மாநில செயலர், தோழர் ஜெ.ராமமூர்த்தி அவர்களிடம்  கொண்டு சென்றோம். 

அவரும் நேற்றைய BI-MONTHLY மீட்டிங்கில் PMG  அவர்களிடமும் DPS அவர்களிடமும் ஏற்கனவே உள்ள  STANDING ORDERS பற்றி எடுத்து கூறி உடனடியாக POSTMAN , GROUP -D   PLACE -ல  வேலை பார்த்த  GDS   தோழர்களுக்கு7-வது ஊதிய கமிசனின் புதிய சம்பள விகிதம் மற்றும் சம்பள அரியர்ஸ் குறித்து  ஆர்டரை பெற்றுள்ளார்கள். 

அந்த ஆர்டர்ஸ் காப்பி நகலை P3, P4 மண்டல செயலர்கள் ஒவ்வொரு கோட்டத்து செயலரிடமும் அனுப்பினால்  அந்த GDS   தோழர்களுக்கு  விரைவில்  புதிய சம்பள விகிதம் மற்றும் சம்பள அரியர்ஸ் கிடைக்கும். அது ஒரு தீபாவளி பரிசாக இருக்கும்.செய்வார்கள் என்று நம்புகிறோம்  


3 comments:

  1. தயவு கூர்ந்து பொள்ளாச்சி கோட்டத்திற்கு ஆர்டர் காப்பி அனுப்புங்கள்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன் தோழரே

      Delete
  2. தயவு கூர்ந்து பொள்ளாச்சி கோட்டத்திற்கு ஆர்டர் காப்பி அனுப்புங்கள்

    ReplyDelete