நமது போனஸ் எப்படி கணக்கிடப்படுகிறது ?
நம் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுவது PRODUCTIVITY LINKED BONUS (PLB). பொதுவாக எப்போதுமே நம் துறை ஊழியர்களுக்கு 60 நாட்களுக்கு தான் BONUS வழங்கப்படுகிறது. அது ஏன் தெரியுமா ? நமக்கென்று ஒரு MAXIMUM CEILING LIMITATION வைத்துள்ளனர். நமக்கான BONUS MAXIMUM CEILING 60 நாட்கள் தான். ஒரு வேலை அரசே முன்வந்து நமக்கு 75 நாட்கள் BONUS கொடுத்தாலும், நமது MAXIMUM CEILING LIMIT 60 நாட்கள் என்பதால் நமக்கு 15 நாட்கள் குறைக்கப்பட்டு 60 நாட்களுக்கு தான் வழங்கப்படும்.
BONUS கணக்கீடு:
ஒரு வருடத்திற்கான 365 நாட்கள் 12 மாதங்களால் வகுக்கப்பட்டு ஒரு மாதத்திற்கான நாட்கள் தருவிக்கப்படுகிறது.
ஒரு மாதத்திற்கான நாட்கள் = 365/12 = 30.4 நாட்கள்
நமக்கு வழங்கப்படும் 60 நாட்கள் மாதங்களாக மாற்றப்படுகிறது.
60/30.4 = 1.974368 மாதங்கள்
நமக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் BONUS தொகை ரூபாய். 7000/-
அப்படியென்றால் நமக்கு கிடைக்கும் BONUS = Rs. 7000 x 1.974368 = Rs. 13815.78
அதாவது ரூபாய். 13816 /-
இதனை சுருக்கமாக கணக்கிட 7000 x 60/30.4 = ரூபாய். 13816 /-
ஒரு வேலை நாம் அந்த நிதியாண்டில் 3 நாட்கள் STRIKE செய்திருப்பதாக வைத்துக்கொள்ளுவோம். அப்படியென்றால் நாம் வாங்கும் BONUS 3 நாட்களுக்கு கழிக்கப்பட்டு வழங்கப்படும்.
13816 X ( 1- 3/365) = Rs. 13702 /-
மூன்று நாட்கள் STRIKE செய்ததற்கு ரூபாய். 114 /- குறைக்கப்படுகிறது.
*************** அறிவோம் ; துணிவோம் ***************
No comments:
Post a Comment