Wednesday, June 15, 2016

TRICHY REGION-DIVISIONAL SECRETARY MEETTING AT THANJAVUR

TRICHY REGION-DIVISIONAL SECRETARY MEETTING AT THANJAVUR 


கடந்த 12.06.2016 அன்று திருச்சி மண்டல AIPEU GDS சங்க கோட்ட /கிளை செயலாளர்கள் கூட்டம் தஞ்சாவூர் தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில உதவி தலைவர் M .இளங்கோவன் தலைமை ஏற்றும் , அஞ்சல் 3 கோட்ட செயலாளர் தோழர் S செல்வக்குமார் முன்னிலை வகிக்க கூட்டம் மதியம் 02.30 மணி அளவில் துவங்கி மாலை 6.00 மணிக்கு முடிந்தது 

       இக்கூட்டத்தில் AIPEU GDS சங்கத்திற்கு அதிக அளவில் அதாவது அனைத்து உறுப்பினர்களையும் நமது சங்கத்தில் சேர்ப்பது , வருகிற 11.07.2016 முதல் NJCA அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் முழுமையாக நடைபெற ஒன்று பட்ட முயற்சியில் நாம் முழுமையாக கலந்துகொள்வது , GDS ஊதியக்குழு முன் நமது தலைவர்கள் 26.05.2016 அன்று கலந்துகொண்டு நேரில் (மெமோரண்டத்தில் கொடுத்தவைகளுக்கு ) விளக்கம் அளித்து இலாக்கா ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் மற்றும் அனைத்து சலுகைகளும் தந்திடவேண்டும் என வலியுறுத்தி பேசி வந்துள்ளார்கள் நிச்சயம் செய்வதாக கமிட்டி தலைவர் அவர்களும் செய்கிறேன் என கூறியுள்ளனர். நிச்சயமாக நடக்கும் என நம்புவோம் ,  


மேலும்  GDS  WORKLOAD,TRCA REVISION, PROTECTION, RECOVERY தொடர்பாக எழுப்பிய பல்வேறு கேள்விகள் தொடர்பாக நமது AIPEU GDS இதுவரை முயற்சி எடுத்து பெற்ற ஆர்டர்கள், இனிஎடுக்கபோகும் முடிவுகள் பற்றி மாநிலசெயலாளர் விளக்கினார்.

குறிப்பாக  GDS  WORKLOAD, NEWLY GDS TRCA  FIXATION, PROTECTION பற்றி நடராஜமூர்த்தி கமிட்டி தெளிவாக கூறாததால்  அனைத்து யூனியனும் தொடர்ந்து பல முறை அப்போதைய  மினிஸ்டர் ஆப் ஸ்டேட் திரு.சச்சின் பைலட் அவர்களிடம் முறையிட்டதால் உடனே Officers Committee V.P Singh அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு (Ref. Dte no.5-1/07-WS-1 Dated on 2-2-2012) பல்வேறு மாநிலங்களில் நேரடியாக ஆய்வு செய்த பிறகு,அவரது பரிந்துரையில்  (Ref.Report of v.p singh committee,Dte no.5-1/07-WS-1Dated on 27-4-2012)


The term “NEW TRCA” is not clear, so  ‘’ The committee recommends that a clarificatory order may be issued on the above lines’ எனவே தான்  16-7-2012 அன்று clarification on fixation of newly appointed GDS குறித்து  டைரக்ரேட் ஆர்டர் (Ref. Dte, Lr.no 5-1/07-WS-1on16-07- 12)வெளியிடப்பட்டது. அதில்  1-1-2006 க்கு பிறகு GDS BPM ஆக அப்பாய்மெண்ட் ஆன GDS BPM  POST corresponding slab 3660 படி வந்தால்  மினிமம்  ஸ்லாப் 3660  என்று தான் பிக்ஸ் செய்யனும், lowest slab 2745 மினிமம்  ஸ்லாப்  என்று  பிக்ஸ் பண்ணக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
                     ஏற்கனவே இது குறித்து Ref.Dte.Lr.no.6-1/2009-PE II dated on 4-1-2010  கடிதத்தின் 3 வது பாராவில்  NEWLY GDS BPM-க்கு பணியில் சேரும் தினத்தில் அதற்கு  முன்பு  அந்த  BPM போஸ்ட்  WORKLOAD  எந்த  மினிமம் NEW ஸ்லாப்  கீழ்  வருதோ  அதன்படி   மினிமம்  ஸ்லாப் பிக்ஸ்  செய்யனும் என்று கூறப்பட்டுள்ளது.

 மேலும்  W.r.t no 5-1/2007-WS-1 dated   15.10.2012protection of TRCA of GDSBPM 
பற்றி கூறும்போது  தற்போது பெற்றுவரும் TRCA ஒருவருடத்திற்கு குறையாது. பிறகு எடுக்கப்படும் சிறப்பு ரிவிசனில் எவ்வளவு WORKLOAD வருகிறதோ அதற்கு இணையான TRCA SLAB படி சம்பளம் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர RECOVERY  பண்ண சொல்லி எந்த ஆர்டரிலும் இல்லை என்பதை தெளிவாக கூறப்பட்டது.

புதுக்கோட்டை, விருத்தாசலம், கடலூர் டிவிசனில் RECOVERY செய்யப்பட்ட 72  GDS  தோழர்களுக்கு விரைவில் பிரச்சினை தீர்க்கக்படும் என்று மாநிலசெயலாளர் தோழர்.திரு.தனராஜ் அவர்கள் உறுதி கூற கூட்டம்  இனிதே  முடிவடைந்தது


         இக்கூட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடத்தி கொடுத்த அஞ்சல் 3 தஞ்சை கோட்ட செயலாளர தோழர் S .செல்வக்குமார் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம் 







No comments:

Post a Comment