மாற்றம் ! முன்னேற்றம் ?
உங்கள் பார்வைக்கு முக்கிய செய்தி !
ஏழாவது ஊதியக் குழு முன்னர் நம் அஞ்சல் பகுதி கோரிக்கைகள், அஞ்சல் துறை மூலமாகவும், ஊதியக் குழு முன்பாக நேரிடையாகவும் நாம் அளித்துள்ளது உங்களுக்குத் தெரியும். அதன் மீது EMPOWERED COMMITTEE அமைக்கப்பட்டு, துறை வாரியாக IMPLEMENTATION CELL அமைக்கப்பட்டு ஊழியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தி, உரிய இலாக்கா பரிந்துரையுடன் EMPOWERED COMMITTEE முன்பாக அளித்திட தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே 31.3.2016 அன்று (அதாவது இன்று ) இது குறித்து நம்முடைய NFPE மற்றும் FNPO சம்மேளனங்கள் இலாக்காவில் அமைக்கப் பட்டுள்ள IMPLEMENTATION CELL உடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டுள்ளோம்.
குறிப்பாக இதில் சொல்ல வேண்டுவது என்னவென்றால் ,
ஏற்கனவே ஏழாவது ஊதியக் குழுவுக்கு நம் துறையின் பரிந்துரைகளாக ஒரு முறையும் ;
நாம் ஏழாவது ஊதியக் குழுவுக்கு கோரிக்கை மனு அளித்த போது அதன் மீதான நம்முடைய துறையின் COMMENTS ஆக ஒரு முறையும் ;
EMPOWERED COMMITTEE க்கு தன்னுடைய பரிந்துரையாக ஒரு முறையும்
நம்முடைய இலாக்கா , மூன்று விதமான பரிந்துரைகளை ஏற்கனவே மூன்று முறை, தனித்தனியாக அளித்துள்ளது. இவற்றை தொகுத்து உங்களின் பார்வைக்கு, நம்முடைய JCA வின் பார்வையாக வைக்கிறோம். இதனுடன் நாம் அளித்த கோரிக்கைகளும் சேர்த்தே வைக்கப்படுகின்றன.
இன்று நடைபெற உள்ள கூட்டத்தின் முடிவாக, நான்காவது முறையாக என்ன பரிந்துரைகளை நம் இலாக்கா அளிக்கப்போகிறது என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
இலாக்காவின் பரிந்துரைகளில் மாற்றம் ! முன்னேற்றம் ! ஏற்பட்டிருக் கிறதா இன்னமும் முன்னேற்றங்கள் ஏற்படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment