Friday, July 25, 2014

GDS (NFPE) மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 5 கட்ட போராட்ட....

HURSDAY, JULY 24, 2014

NFPE
அஞ்சல் – RMS இணைப்புக் குழு , தமிழ் மாநிலம், சென்னை 600 005.

சுற்றறிக்கை எண் : 6                                                            நாள் : 24.07.2014

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !

நமது சம்மேளனத்தின் உறுப்பு சங்கமான, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GDS (NFPE) மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 5 கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்தப் போராட்டங்களை NFPE இன் உறுப்பு சங்கங்கள் ஆதரவுடன் ஒருங்கிணைந்து நடத்திட  நமது சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில்  நமது தமிழ் மாநில அஞ்சல் – RMS இணைப்புக் குழு,  AIPEU GDS NFPE சங்கத்துடன்  இணைந்து இந்தப் போராட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக நடத்திட முடிவெடுத்துள்ளது. 

                        நாடு தழுவிய 5 கட்ட போராட்டம்

இந்திய அஞ்சல் துறையில் GDS ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு  நிரந்தர தீர்வு காண  கடந்த ஆண்டு  பாராளுமன்றம் நோக்கிய பேரணி உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நாம் நடத்தியும் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செவி சாய்த்திட மறுத்துவிட்டது. ஆகவே GDS ஊழியர்களின் முக்கியமான 11 அம்சக் கோரிக்கைகளை  முன்வைத்து நமது சம்மேளன பொதுச் செயலர் மற்றும் GDS சங்கத்தின் பொதுச் செயலர் கையெழுத்திட்ட கோரிக்கை மனு கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி  தேதி புதிய மைய அரசின் மாண்புமிகு பாரதப் பிரதமர், நமது துறை அமைச்சர்  மற்றும் இலாக்கா முதல்வர் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்  நாடு தழுவிய 5 கட்ட போராட்டத்தை  நமது உறுப்பு சங்கமான  GDS சங்கம் அறிவித்துள்ளது.  கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்டுள்ள தொடர் போராட்டங்களுக்கு  வலு சேர்த்திடும் வண்ணம்  நமது சம்மேளனம், அதன் உறுப்பு சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த போராட்டங்களை  நடத்திட  வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோரிக்கைகள்

1. அனைத்து கிளை அஞ்சலகங்களையும் இலாக்கா அஞ்சலகங்களாக  அறிவித்திடு ! அனைத்து GDS ஊழியர்களையும் 1977 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இலாக்கா ஊழியர்களாக ஆக்கிடு !

2. GDS ஊழியர்களின்  பணித்தன்மை, பென்ஷன் மற்றும் ஊதிய விகிதங்கள் குறித்த விபரங்களை 7 ஆவது ஊதியக் குழுவே பரிசீலித்திட வேண்டும்.

3. GDS (CONDUCT & ENGAGEMENT) RULES 2011  என்ற ஊழியர் விரோத சட்டத்தை திரும்பப் பெறு !

                        5 கட்ட  போராட்ட இயக்கங்கள்

முதல் கட்டம் :                  16.07.2014  - கோட்ட மட்டங்களில்  தார்ணா

இரண்டாம் கட்டம் :              05.08.2014 – மண்டல மற்றும் CPMG அலுவலகம்
                                   முன்பாக  மாபெரும்  தார்ணா

மூன்றாம் கட்டம் :               15.09.2014 முதல்  19.09.2014 வரை CPMG அலுவலகம்
                                   முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.

நான்காம் கட்டம் :                எதிர்வரும்  நவம்பர் மாதம் 2014 இல் பாராளுமன்றம்                                    நோக்கிய பேரணி .

அய்ந்தாம் கட்டம்                மத்திய செற்குழு கூடி சம்மேளனத்துடன் இணைந்து
                                  வேலை நிறுத்த அறிவிப்பு .

எனவே  தமிழகத்தில் உள்ள NFPE இன் அனைத்து உறுப்பு சங்கங்களான  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS மூன்று, RMS நான்கு , AUDIT & ACCOUNTS, ADMIN, SBCO சங்கங்களின் நிர்வாகிகள் இந்தப் போராட்டங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறோம்.

அந்தந்த மண்டலங்களில் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS மூன்று, RMS நான்கு, மற்றும் இதர சங்கங்களின் மண்டலச் செயலர்கள்/மாநிலச்சங்க நிர்வாகிகள்/ தலைமையிடத்து கோட்டச் செயலர்கள், GDS சங்க நிர்வாகிகளுடன் ஒன்றிணைந்து05.08.2014 இல் நடைபெறும் தார்ணா போராட்டத்தை அந்தந்த  மண்டல அலுவலக வாயிலில் சிறப்பாக  நடத்திட வேண்டுகிறோம்.

ஒன்று பட்டு போராடுவோம், !   உரிமைகளை வென்றெடுப்போம் !

                        போராட்ட வாழ்த்துக்களுடன்
J. ராமமூர்த்தி,                                          K. சங்கரன்,          
மாநில செயலர்அஞ்சல் மூன்று    மாநில செயலர் - RMS மூன்று,
மற்றும் கன்வீனர்.                                      மற்றும் தலைவர்.

S. ரவிச்சந்திரன்,                                           B. பரந்தாமன்,
மாநில செயலர் - அஞ்சல் நான்கு     மாநில செயலர் - RMS நான்கு,
                                                               
B. சங்கர்,                                                    P. நாகராஜன்,
மாநில செயலர் - அஞ்சல் கணக்கு. மாநில செயலர்நிர்வாகப் பிரிவு,

V.G. கோவிந்தராஜலு ,                                        R. தனராஜ்,
மாநில தலைவர்  - SBCO,                 மாநில செயலர் - NFPE-GDS.

NFPE
அஞ்சல் – RMS இணைப்புக் குழு , தமிழ் மாநிலம்
                                                            

No comments:

Post a Comment