தென் மண்டலத்தில் கடந்த 10.01.2014 அன்று மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் சார்பில் திரு. ராமர் , SSRM, MA DIVISION மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள் அளித்து உயர்மட்ட விசாரணை கோரியிருந்தோம். PMG, SR அவர்களும் நம் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதி கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக நாம் அளித்த ஊழல் குற்றச் சாட்டுக்கள் மீது உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு விதி 16 இன் கீழ் குற்றப் பத்திரிகை வழங்கப்பட்டு ரூ.1,00, 000/- சம்பளப் பிடித்தம் செய்ய உத்திரவிடப்பட்டது. அவரும் உடன் அந்தத் தொகையை கட்டி விட்டார். பின்னர் நம் புகாரின் மீது மேல் நடவடிக்கையாக, அவர் பணி ஒய்வு பெரும் 30.06.2014 அன்று அவருக்கு விதி 14ன் கீழ் குற்றப் பத்திரிகை வழங்கப் பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது விதி 9 இன் கீழ் இலாக்கா விசாரணை நடந்து வருகிறது.
நம்முடைய தென் மண்டலப் போராட்டத்தின் காரணமாக உருண்ட தலைகள் , சிவகங்கை மற்றும் திண்டுக்கல் கண்காணிப்பாளர்களின் உடனடி இடமாற்றம் மற்றும் SSRM MA மீது விதி 14 குற்றப் பத்திரிக்கையாகும் .இது நமது இயக்கத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஊழலுக்கு எதிரான நம் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியுமாகும்.
No comments:
Post a Comment