Tuesday, July 8, 2014

ANNOUNCED VACANCIES OF P.A. CADRE IN TN CIRCLE AND THE PRESENT POSITION OF VARIOUS EXAM RESULTS

ANNOUNCED VACANCIES OF P.A. CADRE IN TN CIRCLE AND THE PRESENT POSITION OF VARIOUS EXAM RESULTS

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். இன்று (07.07.2014) நம் மாநிலச் செயலர் தோழர். J .R .  அவர்களின்  CPMG , TN  மற்றும் DPS  HQ  உடனான சந்திப்பு , மற்றும் இதர அதிகாரிகளுடனான  சந்திப்பு நடைபெற்றது. அதில் பல்வேறு பிரச்சினைகள்  விவாதிக்கப்பட்டன. அவற்றை  மேலே உள்ள POST  இல் பார்க்கலாம். 

தற்போது நடைபெற்ற தேர்வுகள், காலியிடங்கள் , LSG  பதவி உயர்வு குறித்த இன்றைய நிலை போன்ற பிரச்சினைகளில் உரிய அதிகாரிகளிடம் இருந்து பெற்ற தகவல்களை கீழே காணலாம். 

நாம் ஏற்கனவே நமது வலைத்தளத்தில் 2014 க்கான (31.12.2014 வரை )  நேரடி எழுத்தர் (P.A.P.O.)அறிவிக்கபபட்ட  காலியிடங்களை தெரிவித் திருந்தோம். அது மொத்தம்   :      641

தற்போது 2014 க்கான  LGO  விலிருந்து (DEPARTMENTAL  QUOTA)  எழுத்தருக்கான காலியிடங்கள்  அறிவிக்கப்பட உள்ளன . அவை மொத்தம் :      265 

மேலும் 2012 க்கான GDS  இலிருந்து எழுத்தராவதற்கான(RESIDUAL  VACANCIES)  காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன . அவை மொத்தம்:  254

(ஆனால் காலியிடங்களை ஈடுகட்டும் அளவுக்குக் கூட GDS  இலிருந்து விண்ணப்பங்கள் வரவில்லை என்பது வருத்தமே . ஆதலால் தேர்வு எழுதும் GDS  ஊழியர் குறைந்த பட்ச  மதிப்பெண் (O C : 40% OBC : 37 % SC /ST : 33%  ) பெற்றாலே எழுத்தராகிவிடலாம். இந்த முறை தேர்வு வினாத்தாள் ஓரளவு GDS  ஊழியர் எதிர்கொள்ளும்  வகையில் மாற்றப் பட்டுள்ளதாக   தகவல் தெரிவித்தார்கள் )

2013 க்கான RESIDUAL  VACANCIES அறிவிக்கப் படவில்லை . 

ஆக அஞ்சலக எழுத்தர் (P.O.P.A.)  அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் மொத்தம்  :  641 + 265 +  254 = 1160. 

இது தவிர   C.O. P.A., RMS SA, MMS P.A., SBCO PA  என்று காலியிடங்கள் அறிவிப்பு இந்த ஆண்டு   31.12.2014 வரைக்குமான அளவில் நாம் அதிக அளவில் பெற்றுள்ளோம். இதன் மூலம் ஆட்பற்றாக்குறை  நிச்சயம் பெருமளவு குறையும் .

MTS  தேர்வு முடிவுகள்  அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது .

 P.A. DIRECT RECTT. தேர்வு முடிவுகள் தமிழகத்தை பொறுத்தவரை  ஆகஸ்ட் 2014 இறுதியில் வெளியாகலாம்.

LSG  பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப் பட்டு READY  ஆக உள்ளதாகவும் , நீதிமன்ற வழக்கின் காரணமாக  நிலுவையில்  வைக்கப்பட்டுள்ள தாகவும்  தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் 11.07.2014 அன்று வழக்கு விசாரணைக்கு வருவதாகவும் அதில்  மனுதாரர்களுக்கான இடங்களை தீர்வு செய்வதை நிலுவையில் வைத்து இதர காலியிடங்களை நிரப்பிக் கொள்ள  உத்திரவு பெற முடியுமானால் , பட்டியல் வெளியிட முடியும் என்றும் தெரிவிக்கப் பட்டது.

No comments:

Post a Comment