Tuesday, January 16, 2018

GDS PAY COMMITTEE - தகவல்.

கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த திரு .Guiness Madasamy என்பவர்  நிதி அமைச்சகதிற்கு RTI மூலம் கேட்கபட்ட கேள்விக்கு நிதியமைச்சகம் அளித்துள்ள பதில்.

 தோழர் அவர்களுக்கு நன்றி..

1.  TRCA என்ற முறையே தொடரும்.  TRCA என்பது 31.12.2015 ல் வாங்கிய அடிப்படை ஊதியம் என்ன மணிக் கணக்கில் உள்ளதோ அதற்கு ஏற்ப புதிய நிர்ணய படி 4 மணி,5 மணி நேரம் என வரையறுக்கபட்டு TRCA,  GDS BPM- Rs.12000- 14500,  Other than GDS BPM 10000- 12000 என  நிர்ணயம் செய்யலாம் என்றும், ஊதியம் என்ற பெயர் மாற்றம் தேவை இல்லை எனவும் அஞ்சல் இலாக்கா பரிந்துரையை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. இனியும் TRCA என்றே அழைக்கப்படும்.

2.  31.12.2015 Basic TRCA x2.57= அடிப்படை TRCA நிர்ணயம் செய்யப்படும். அதற்கான நிர்ணய பட்டியலில் உள்ள கணக்கீடு படி நிர்ணயம் செய்து 01.01.2016 முதல் அமுலாகும். அதற்கான நிலுவை தொகை  வழங்கப்படும்

3. ஆண்டு ஊதிய உயர்வு 3%  என்பதை நிதி அமைச்சகம் ஏற்றுகொண்டு உள்ளது.

4. Composite Allowance ,Cycle Allowance, Stationary allowance  உள்ளிட்ட படிகள் கமலேஷ் சந்திர கமிட்டி பரிந்துரையை நிதி அமைச்சகம் ஏற்றுகொண்டு உள்ளது.

5. Children Education Allowance ஆனது DOPT வின் ஒப்புதலை பெற்று அமலாக்கபடும்.

6. TRCA தவிர மற்ற அனைத்து பரிந்துரைகளும் வரும்காலத்தில் அஞ்சல் துறை முடிவு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

7. SDBS பலன் உள்ளிட்ட அனைத்து welfare பலன்களும் இலாக்கா தனியாக முடிவு செய்து கொள்ளுங்கள் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.


மேற்கண்ட அனைத்து பரிந்துரைகளை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டாலும் தற்போது அமைச்சரவை ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. மேற்கண்ட அனைத்து பரிந்துரைகளையாவது அமைச்சரவை ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Composite Allowance , Cycle Allowance, Stationary மற்றும் அறிவிக்க இருக்கும் மற்ற படிகள் ஆணை வெளியிடப்படும் நாள் முதல் வழங்கப்படும் என நமது இலாக்கா பரிந்துரையை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இம்மாத இறுதியில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.தனராஜ் மாநில செயலாளர்- AIPEU GDS TN.



2 comments: